அமெரிக்கா  சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை அதிபர் டிரம்ப்பும், அவரது மனைவியும் வெள்ளை மாளிகையில் சிவப்புக் கம்பள உபசரிப்போடு வரவேற்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டொனால்டு டிரம்ப் பிரதமர் மோடிக்கு விருந்து அளித்தார். பின்னர்  இருவரும் பல்வேறு வி‌ஷயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.


இருவரும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்பொழுது டொனால்டு டிரம்ப் கூறியது,


மிகச்சிறந்த பிரதமரான நரேந்தி மோடி அமெரிக்கா வந்திருப்பது பெருமை அளிக்கிறது என்றும், பொருளாதார ரீதியாக பிரதமர் மோடி, சிறப்பாக செயல்பட்டு வருவதாக  பாராட்டினார்.


இந்தியா - அமெரிக்கா இடையே உள்ள நல்லுறவு சிறப்பானது என்றும் இந்த இரு நாடுகளும் இணைந்து தீவிரவாதத்தை முறியடிக்க வேண்டும் என்றும் கூறினார்.


பிரதமர் மோடியும், நானும் சமூக வலைதளங்களில் சர்வதேச தலைவர்கள் என்பதை அமெரிக்க மற்றும் இந்திய மக்களுக்கு தெரிவித்துக் கொள்ள மிகவும் பெருமை கொள்கிறேன் என்றார். 


டொனால்டு டிரம்ப்பின் பாராட்டை ஏற்றுக் கொண்ட மோடி கூறியது,


அதிபர் டிரம்ப் தனக்கு அளித்த வரவேற்பு எனக்கான வரவேற்பு அல்ல என்றும் 125 கோடி இந்தியர்களுக்கான வரவேற்பு என்று தெரிவித்தார். நீங்கள் குடும்பத்துடன் இந்தியாவிற்கு வர வேண்டும். உங்களை இந்தியாவில் வரவேற்கவும், விருந்து வழங்கவும் எனக்கு வாய்ப்பு வழங்குவீர்கள் என நம்புகின்றேன் என பிரதமாத் கூறினார்.