உலகின் மிக சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்
உலகின் மிக சக்திவாய்ந்த நபராக மாறிய பிரதமர் மோடி. அமெரிக்க அதிபர், சீனா அதிபர் மற்றும் ரஷ்யா அதிபர் என அனைவரையும் பின்னுக்கு தள்ளிய நரேந்திர மோடி.
புதுடெல்லி: நமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி ஒரு இரும்பு என்று உலகம் நம்புகிறது. பிரிட்டிஷ் ஹெரால்டின் கருத்துக் கணிப்பில், வாசகர்கள் 2019 ஆம் ஆண்டில் உலகின் மிக சக்திவாய்ந்த நபராக பிரதமர் மோடியைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
பிரிட்டிஷ் ஹெரால்டின் நடத்திய வாக்கெடுப்பில் 25க்கும் மேற்பட்ட முக்கிய மற்றும் பிரபலமான நபர்கள் சேர்க்கப்பட்டனர். அதில் விளாடிமிர் புடின், டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜி ஜின்பிங் போன்ற சக்திவாய்ந்த தலைவர்களுக்கும் இடம் பெற்றிருந்தனர்.
உலகின் மிக சக்திவாய்ந்த நபரைத் தேர்ந்தெடுப்பதற்கு பொதுவான நடைமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது. ஆனால் பிரிட்டிஷ் ஹெரால்டு நடத்திய வாக்கெடுப்பில் வாசகர்களுக்கு வாக்களிக்க ஒரு முறை மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. எந்தவொரு நபருக்கும் எந்தவொரு தலைவருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாக்களிக்க முடியாது என்பதே அதன் நோக்கம். இத்ஹில் ஆச்சரியம் என்னவென்றால், வாக்களிக்கும் போது இணையத்தளம் செயலிழந்தது. வலைத்தள செயலிழப்புக்கான காரணம், ஏராளமான மக்கள் வாக்களிக்க தளத்திற்கு வந்தது தான்.
சனிக்கிழமை வாக்களிப்பு முடிவதற்குள், பிரதமர் நரேந்திர மோடி வாக்கெடுப்பில் அதிக 30.9 சதவீத வாக்குகளைப் பெற்றார். அவர் விளாடிமிர் புடின், டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜி ஜின்பிங் ஆகியோரை விட முன்னால் உள்ளார்.
பிரிட்டிஷ் ஹெரால்ட் வாக்கெடுப்பில், மோடிக்கு அடுத்தபடியாக இரண்டாவது சக்திவாய்ந்த மனிதராக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடம் பெற்றுள்ளார். அவர் 29.9 சதவீத வாக்குகளைப் பெற்றார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 21.9 சதவீத வாக்குகளுடன் மூன்றாம் இடத்தில் இருந்தார். இறுதியாக, சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் 18.1 சதவீத வாக்குகளைப் பெற்றார்.
வாக்கெடுப்பில் முதலிடம் பிடித்த பிரதமர் நரேந்திர மோடியின் படம் பிரிட்டிஷ் ஹெரால்ட் இதழின் ஜூலை பதிப்பின் அட்டைப் பக்கத்திலும் வெளியிடப்படும். இந்த பதிப்பு ஜூலை 15 அன்று வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.