புதுடெல்லி: மூன்றுநாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியாவும் ஜப்பானும் நேற்று கையொப்பமிட்டன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் ஜப்பான் நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவுடன் பிரடமர் மோடி புகழ்பெற்ற ஷின்கான்சன் புல்லெட் ரயிலில் இன்று  பயணித்தார். கோபோ நகருக்கு இருவரும் புல்லெட் ரயில் மூலமாக சென்றனர்.


ஜப்பானின் கோப் பகுதியில் இந்தியர்களிடம் உரையாடிய மோடி, குஜராத் பூகம்பத்தின் போது கோப் உதவியது. பூகம்ப பாதிப்பிலிருந்து குஜராத் மீண்டு, வளர்ச்சி பாதையில் சென்றதற்கு காரணம் மோடி அல்ல. இந்திய மக்கள் மட்டுமே. இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் ஒவ்வொன்றும் உங்களை நிச்சயம் பெருமைப்படுத்தும். இந்தியாவில் நடக்கும் ஒவ்வொரு நன்மையும் 125 கோடி இந்தியர்களால் தான். நேரடி அந்நிய முதலீட்டில் இந்தியா வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளது. வறுமையின் அச்சுறுத்தலில் இருந்து இந்தியா மீள வேண்டும். 


ரூ.500, 1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதை இந்திய மக்கள் தலைவணங்கி ஏற்றுக் கொண்டுள்ளனர். இதை ஏற்றுக் கொண்ட 125 கோடி மக்களுக்கு தலைவணங்குகிறேன். உலக வங்கியும், ஐஎம்எப்.,ம் இந்தியாவை பாராட்டி உள்ளன. பல சிரமங்களை சந்தித்த போதிலும், இந்த முடிவை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இது கறுப்பு பணத்திற்கு எதிரான போராட்டம். நேர்மையான மக்களை பாதுகாப்பதற்கான அனைத்தையும் அரசு செய்யும். கறுப்பு பணம் அத்தனையும் வெளியேறி வருகிறது. வரிஏய்ப்பு, பதுக்கல்காரர்களுக்கு எதிராக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஒவ்வொரு இந்தியருக்கும் தலை வணங்குகிறேன் என ஜப்பானில் உரையாற்றிய பிரதமர் மோடி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், ஜப்பான் நாட்டின் முக்கிய நகரமான கோபே நகருக்கு அந்நாட்டு பிரதமருடன் புல்லட் ரயிலில் "ஷின்கான்சென்" புல்லட் ரயிலில் பயணம் மேற்கொண்டார். அந்நகருக்கு சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்.


மேலும் நேர்மையான குடிமக்களின் நலன்களை பாதுகாக்க இந்த அரசாங்கம் அனைத்தையும் செய்யும். இந்த நடவடிக்கைகள் ஒரே நாளில் எடுக்கப்பட்டது கிடையாது.