நேதாஜியின் சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் 75 வது ஆண்டு விழாவை ஒட்டி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் மோடி...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேதாஜியின் சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் பவள விழாவை ஒட்டி, செங்கோட்டையில் நரேந்திர பிரதமர் மோடி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். 1943 ஆம் ஆண்டில் இதே அக்டோபர் 21 ஆம் தேதியில் இந்தியா சுதந்திரம் பெற்று விட்டதாக அறிவித்து அதற்கான தனி ராணுவத்தையும் அரசையும் உருவாக்கியிருப்பதாக நேதாஜி அறிவித்தார்.


இதனை நினைவுகூரும் வகையில் இன்று செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைப்பதுடன் ஆசாத் ஹிந்த் என்ற பெயரில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் சுதந்திரப் போராட்டத்தை விளக்கும் அருங்காட்சியகத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.