பிரதமர் மோடி மொரேனா பேரணி: இன்று மத்திய பிரதேச மாநிலம் மொரீனாவில் தேர்தல் பரப்புரை பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மீண்டும் நாற்காலி ஆசைக்காக போராடி வருவதாகவும், நாற்காலியைப் பெற எல்லா வகையான விளையாட்டுகளையும் விளையாடுகிறது எனக் கடுமையாக சாடினார்.. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் நரேந்திர மோடி பேசியது..


தேர்தல் பேரணியில் பேசிய பிரதமர் மோடி, ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல் அவரைத் தாக்கினார். இந்த நாட்களில் காங்கிரஸ் இளவரசர் மோடியை தினமும் அவமதித்து மகிழ்கிறார் என்று கூறினார். எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பார். இதனால் நாட்டின் பிரதமரை ஏன் இப்படியான பேசிக்கிறார் என்று சிலர் வருத்தப்படுகின்றனர். அனைவருக்கும் எனது வேண்டுகோள் என்னவென்றால், தயவுசெய்து வருத்தப்பட வேண்டாம், கோபப்பட வேண்டாம், அவர்கள் பிரபலமானவர்கள், நாங்கள் மக்களுக்காக சேவை செய்பவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும் என்றார்.


ஓபிசி, எஸ்சி, எஸ்டி, உரிமைகளை பறிக்க காங்கிரஸ் சதி -பிரதமர்


காங்கிரஸ் மீண்டும் மதத் துவேஷத்தை கையில் எடுத்துள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கர்நாடகாவில் உள்ள அனைத்து முஸ்லிம் சமுதாய மக்களையும் ஓபிசி என காங்கிரஸ் அறிவித்துள்ளது எனக் குற்றம் சாட்டியுள்ளார். அதாவது கல்வி மற்றும் அரசு வேலைகளில் ஓபிசி சமூகத்திற்கு இருந்த இடஒதுக்கீட்டில் பல புதியவர்களை கொண்டு வந்ததால், ஓபிசி மக்களுக்கு கிடைத்த இடஒதுக்கீடு ரகசியமாக பறிக்கப்பட்டது என்ற குற்றசாட்டை முன்வைத்து, தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் உரிமைகளை பறிக்க காங்கிரஸ் நீண்ட காலமாக சதி செய்து வருகிறது என்று பிரதமர் கூறினார். 


மேலும் படிக்க - அமேதியை கைவிட்டது போல வயநாட்டையும் கைவிடுவார் ராகுல்: பிரதமர் மோடி ஆரூடம்


மத அடிப்படையில் இடஒதுக்கீடு -பிரதமர் மோடி குற்றச்சாட்டு


2011 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், மதத்தின் பெயரால் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து அமைச்சரவையில் குறிப்பைக் கொண்டு வந்தது. ஓபிசி சமூகத்தினருக்கு வழங்கப்படும் 27% இடஒதுக்கீட்டில் ஒரு பகுதி மதத்தின் பெயரால் வழங்கப்படும் என அமைச்சரவை குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 2 நாட்களுக்குப் பிறகு, 22 டிசம்பர் 2011 அன்று, அதுக்குறித்த உத்தரவும் வெளியிடப்பட்டது. பின்னர் காங்கிரஸ் அரசின் இந்த உத்தரவை ஆந்திர உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதனையடுத்டு அவர்கள் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றார். ஆனால் அங்கும் எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை.


காங்கிரசின் கனவை அழித்து ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்த மக்கள் - மோடி


2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறியதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால், 2014ல் தலித், ஓபிசி, பழங்குடி சமூகம் விழித்துக் கொண்டது. அதன் பிறகு அனைத்துச் சமூகங்களும் ஒன்றிணைந்து காங்கிரசின் கனவுகளை அழித்து ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்தனர் என பிரதமர் மோடி கூறினார்.


பிரதமர் மோடியின் பேச்சு பொய்யானது -கர்நாடக முதல்வர் சித்தராமையா ட்வீட்



மறுபுறம், கர்நாடக முதல்வர் சித்தராமையா ட்வீட் மூலம் பிரதமர் மோடியின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். ஓபிசி மற்றும் தலித்துகளுக்கு வழங்கப்படும் இடஒதுகீட்டில் முஸ்லிம்களுக்கு இடஒதுகீடு கொடுக்கப்பட்டது என்ற பிரதமர் மோடியின் பேச்சு பொய்யானது என்றார். பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் ஆதாரம் காட்ட வேண்டும் அல்லது நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் இது தொடர்பான ஏதாவது அரசு ஆவணம் உள்ளதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 


மேலும் படிக்க - 'எங்க கட்சி வேட்பாளருக்கு ஓட்டு போடாதீங்க...' காங்கிரஸின் வினோத பிரச்சாரம் - காரணம் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ