பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடி இன்று நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் கூட்டத்தில் பேசினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடக அரசு மற்றும் வெளியுறவுத்துறை ஆகியவை சார்பில் 14-வது இந்திய சுற்றுலா தின மாநாடு (பிரவாசி பாரதீய திவஸ்) பெங்களூரு துமகூரு ரோட்டில் உள்ள சர்வதேச மாநாட்டு அரங்கத்தில் இன்று தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில், மலேசியா, மொரிஷியஸ், போர்ச்சுக்கல், சூரிநாம், உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். 


இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது:


வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் மதிக்கும் இந்தியாவை பெருமைப்படுத்தும் வகையில் இந்த மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உங்களை வரவேற்பதில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. 


இங்கு தான் நீங்கள் பார்வையாளராகவும், சிறப்பு விருந்தினராகவும் இருக்க முடியும். வெளிநாட்டில் அதிகளவில் வசிப்பதால் இந்தியர்கள் மதிக்கப்படவில்லை. அவர்களின் பங்களிப்பு காரணமாகவே மதிக்கப்படுகின்றனர்.


இந்தியாவின் வளர்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. உலக மக்களுக்கு வழிகாட்டியாக அவர்கள் திகழ்கின்றனர். வெளிநாடு வாழ் இந்தியர்களின் பிரச்னைக்கு தீர்வு காண தூதரகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


மேலும், கறுப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு நல்கி வரும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மோடி கூறினார்.