உண்மை, அஹிம்சையின் அடையாளமான காசி புதிய ஒளி பெற்றுள்ளது: பிரதமர் மோடி
கங்கை கரையுடன் நேரடியாக இணைக்கும் நடைபாதை, அருங்காட்சியகம், நூலகம், பக்தர்கள் தங்கும் இடங்கள், அரங்குகள், உணவு கூடங்கள் உள்பட 23 புதிய கட்டிடம் கொண்ட வளாகத்தை பக்தர்கள் பயன்பாட்டிற்கு பிரதமர் திறந்து வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, மேம்படுத்தப்பட்ட காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தை நாட்டு மக்களுக்கு இன்று அர்ப்பணித்தார். 3,000 சதுர அடி என்ற மிகச் சிறிய அளவில் இருந்த ஆலய வளாகத்தை பல்வேறு சிறப்புக்களுடன், விரிவாக்க திட்டமிடப்பட்டது. வாரணாசி தொகுதியின் மக்களவை உறுப்பினரான பிரதமர் மோடியின் கனவுத் திட்டமாகவே இந்த திட்டம் பார்க்கப்பட்டது.
கங்கை கரையுடன் நேரடியாக இணைக்கும் நடைபாதை, அருங்காட்சியகம், நூலகம், பக்தர்கள் தங்கும் இடங்கள், அரங்குகள், உணவு கூடங்கள் உள்பட 23 புதிய கட்டிடம் கொண்ட வளாகத்தை பக்தர்கள் பயன்பாட்டிற்கு பிரதமர் திறந்து வைத்தார்.
காசி விஸ்வநாதர் ஆலயத்தை சுற்றி பழமை மாறாமல் பல புதிய சிறிய கோயில்களும் கட்டபட்டுள்ளன. இதன் மிக முக்கிய அம்சம் என்னவென்றால், விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகில் உள்ள கங்கை நதிக்கரையான லலிதா படித்துறையையும், விஸ்வநாதர் கோயிலையும் இணைக்கும் 320 மீட்டர் நீளம் கொண்ட பாதை தான்.
ALSO READ | காசி விஸ்வநாதர் கோவில் வளாகம்; கங்கையில் புனித நீராடிய பிரதமர் மோடி
கங்கையில் நீராடி, புனித நீரை எடுத்துச் சென்று கோயிலில் வழங்குவது தொன்று தொட்டு நடந்து வந்த வழக்கமாகும். இதில், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நெருக்கடி மிகுந்த தெருக்கள் வழியாக, கோயிலுக்கு செல்ல வேண்டியிருந்தது. இந்த நிலையை மாற்றும் வகையில் காசி விஸ்வநாதர் ஆலய வளாக திட்டத்தில், காசி விஸ்வநாதர் ஆலயத்தையும், கங்கை நதியின் கரைகளையும் இணைக்கும் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கால பைரவர் கோவிலில் வழிபாடு செய்த பின்னர், கங்கை நதியில் புனித நீராடினார். பின்னர், கோவில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பூக்களை தூவி நன்றி உணர்ச்சியை வெளியிட்டார்.
"இன்று, இந்த பிரமாண்ட வளாகத்தின் கட்டுமானத்திற்காக உழைத்த ஒவ்வொரு தொழிலாளிக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கோவிட் 19 காலத்திலும், பணிகள் நிற்காமல் நடைபெற்றன," என்று அவர் கட்டுமான பணியாளர்களை பாராட்டினார்.
காசியின் வளர்ச்சி ஈடு இணையில்லா எண்ணற்ற நல்லொழுக்க ஆத்மாக்களின் ஆற்றலை உள்ளடக்கியது. அதனால் தான் மத, இனம். மொழி கடந்து பல தரப்பில் இருந்தும் மக்கள் இங்கு வருகிறார்கள் என பிரதமர் மோடி கூறினார். உண்மை, அஹிம்சையின் அடையாளமான காசி புதிய ஒளி பெற்றுள்ளது எனவும் பிரதமர் மோடி கூறினார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR