பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மேம்படுத்தப்பட்ட காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தை நாட்டு மக்களுக்கு இன்று அர்ப்பணிக்கிறார்.
கங்கை கரையுடன் நேரடியாக இணைக்கும் நடைபாதை, அருங்காட்சியகம், நூலகம், பக்தர்கள் தங்கும் இடங்கள், அரங்குகள், உணவு கூடங்கள் உள்பட 23 புதிய கட்டிடம் கொண்ட வளாகத்தை பக்தர்கள் பயன்பாட்டிற்கு பிரதமர் திறந்து வைக்கிறார்.
முன்னதாக, கால பைரவர் கோவிலில் வழிபாடு செய்த பின்னர், கங்கை நதியில் புனித நீராடினார். இன்னும் சற்று நேரத்தில் அவர் காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
வீடியோவை இங்கே காணலாம்:
#WATCH | PM Narendra Modi offers prayers, takes a holy dip in Ganga river in Varanasi
The PM is scheduled to visit Kashi Vishwanath Temple and inaugurate the Kashi Vishwanath Corridor project later today
(Video: DD) pic.twitter.com/esu5Y6EFEg
— ANI UP (@ANINewsUP) December 13, 2021
ALSO READ | புராதனமும், நவீனமும் இணையும் காசி விஸ்வநாதர் கோவில்
ரூ.339 கோடியில் கட்டப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தின் முதல் கட்டத்தை அவர் தொடங்கி வைக்கிறார். கங்கையில் நீராடி, புனித நீரை எடுத்துச் சென்று கோயிலில் வழங்குவது தொன்று தொட்டு நடந்து வந்த வழக்கமாகும். இதில், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நெருக்கடி மிகுந்த தெருக்கள் வழியாக, கோயிலுக்கு செல்ல வேண்டியிருந்தது. இந்த நிலையை மாற்றும் வகையில் காசி விஸ்வநாதர் ஆலய வளாக திட்டத்தில், காசி விஸ்வநாதர் ஆலயத்தையும், கங்கை நதியின் கரைகளையும் இணைக்கும் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR