புதுடெல்லி: அமெரிக்க அதிபராக கடந்த 20-ம் தேதி பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி ஹாட்லைன் மூலம் உரையாடினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது, உலகில் உள்ள சவால்களை எதிர்கொள்வதில் அமெரிக்காவின் உண்மையான நட்பு நாடாக இந்தியா இருந்து வந்துள்ளதை டொனால்ட் டிரம்ப் சுட்டிக் காட்டினார்.


இருநாடுகளுக்கிடையிலான நட்புறவை மேலும் பலப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி விரிவான ஆலோசனை நடத்திய இருநாட்டு தலைவர்களும் உலகளாவிய அளவில் தீவிரவாதத்தை எதிர்க்கும் போரில் தொடர்ந்து ஒன்றிணைந்து செயலாற்றுவது என உறுதி ஏற்றுள்ளனர்.


அமெரிக்கா-இந்தியா இடையிலான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத்துறை தொடர்பான கூட்டு செயல்பாடுகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என டொனால்ட் டிரம்ப் கூறி இருந்தார். மேலும் இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்கா வர மோடிக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.


டிரம்ப் உடனான இந்த உரையாடல் குறித்து மோடி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.