PM Narendra Modi Kashmir Visit: பிரதமர் நரேந்திர மோடி நேற்று சொர்க்கப்பூமியான காஷ்மீருக்கு சென்றார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு அவர் காஷ்மீருக்கு மேற்கொண்டுள்ள முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமரை காஷ்மீர் மக்கள் மிகுந்த ஆசையோடும் அன்போடும் வரவேற்றனர். பல வித நலத்திட்டங்களை பிரதமர் தொடக்கி வைத்தார். இவை காஷ்மீர் மக்களை மகிழ்வித்த அதே நேரம் பிரதமரை மகிழ்வித்த நிகழ்வுகளுக்கும் இந்த பயணத்தில் பஞ்சமில்லாமல் இருந்தது. அவற்றில் ஒன்றுதான் காஷ்மீரில் நேர்மறை எண்ணங்களையும், ஊக்கத்தையும், உத்வேகத்தையும் பரப்பிக்கொண்டிருக்கும் ஒரு காஷ்மீர் இளைஞனின் செயல்பாடுகள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சில ஆண்டுகளிக்கு முன்னர் புல்வாமாவைச் சேர்ந்த ஆதில் அகமது தார் என்ற இளைஞன் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) கான்வாய் மீது தனது வெடிபொருள் நிரப்பப்பட்ட காரை மோதினார். ஜம்மு காஷ்மீரில் நடந்த இந்த மிகக் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் 44 வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. காஷ்மீர் மாறிவிட்டது. அதே பகுதியை சேர்ந்த மற்றொரு இளைஞரான நாசிம் நசீர், நேற்று தனது தொழில்முனைவின் வெற்றிக் கதையை பிரதமர் நரேந்திர மோடியிடம் விவரித்து அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். கல் வீசிய காஷ்மீர் இளைஞர்கள் இன்று கடுமையாக உழைத்து வாழ்வில் முன்னேறி வருகிறார்கள். இதை அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் பெருமையாக கருதுகிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதிலிருந்து ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட மாற்றத்தை இது நன்கு விளக்குகிறது. மாறிவரும் காஷ்மீருக்கு நசீம் நசீரே ஒரு எடுத்துக்காட்டாக உள்ளார். 


புல்வாமாவில் உள்ள ஆதில் அஹ்மத் தார் கிராமத்திலிருந்து நாசிம் நசீரின் சம்பூரா என்ற கிராமம் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இரு கிராமங்களுக்கும் இடையில் ஜீலம் நதிதான் உள்ளது. ஆனால், இரு இளைஞர்களுக்கும் உள்ள வேறுபாடுகள் ஏராளமனவை. 


மேலும் படிக்க | தேர்தலிலும் கால் பதிக்கும் முகமது ஷமி... பாஜக சார்பில் போட்டியா? - முழு விவரம்!


காகபோராவில் உள்ள குண்டிபாக்கைச் சேர்ந்த தார், பிப்ரவரி 2019 இல் சிஆர்பிஎஃப் கான்வாய் மீது தனது காரை மோதி பயங்கரவாதத்திற்கான பாதையை தேர்ந்தெடுத்தார். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் இந்திய சர்ஜிக்கல் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அந்த பயங்கரவாத தாக்குதல் 2019 பிப்ரவரி 14 அன்று நடந்தது. இந்த தாக்குதல் நடந்த சில மாதங்களில் பொதுத் தேர்தல் நடந்தது. ஆனால், அடுத்த பொதுத் தேர்தல் இப்போது நடக்கவுள்ள நிலையில், மற்றொரு காஷ்மீர் இளைஞன் தேர்ந்தெடுத்திருக்கும் மற்றொரு பாதை அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.


வியாழக்கிழமை ஸ்ரீநகரின் பக்ஷி மைதானத்தில் நடந்த பிரதமர் மோடியின் பேரணியில், நாசிம் நசீர் தனது கதையை பிரதமரிடம் விவரித்தார். இதனைக் கேட்டு பிரதமர் மகிழ்ந்தது மட்டுமல்லாம்ல, அவரது உத்வேகத்தால் உந்தப்பட்டார். அந்த இளைஞர் பிரதமர் அவருடன் செல்ஃபி எடுக்கும் அளவுக்கு அவரை கவர்ந்து விட்டார். 


பிரதமருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என அந்த இளைஞன் கேட்டுக்கொண்டார். சிறப்புப் பாதுகாப்புக் குழுவின் (SPG) மேற்பார்வையில் அவர் மேடைக்கு அழைக்கப்பட்டு, பிரதமர் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அவரை தனது "நண்பர்" என்று குறிப்பிட்ட பிரதமர் " நாசீமின் நல்ல பணிகளால் தான் ஈர்க்கப்பட்டதாக” கூறினார். 


2018 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு படிக்கும் போது இரண்டு தேன் கூடு பெட்டிகளை தனது கூரையில் வைத்து தான் தனது பயணத்தை தொடக்கியதாக நசீம் பிரதமரிடம் கூறினார். மத்திய அரசின் நலத்திட்டங்கள், மானியங்கள் மூலம் தான் தனது தேன் வியாபாரத்தை பெருக்கிய விதத்தை அவர் பிரதமரிடம் விவரித்தார். கடுமையாகவும், சாமர்த்தியமாகவும் உழைத்து, தானும் உயர்ந்து தன்னை சுற்றுயுள்ளவர்களுக்கும் வேலை வாய்ப்பளித்து, பலரை ஊக்குவித்து, ஆக்கப்பூர்வமான முன்னுதாரண்மாக திகழும் அந்த இளைஞனை பிரதமர், அவர் காஷ்மீரில் ஒரு ‘இனிமையான புரட்சி’-யை கொண்டுவந்துள்ளதாக பாராட்டினார்.


மேலும் படிக்க | வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் - அறிவித்த ராகுல் காந்தி... அதிர்ச்சியில் பாஜக!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ