நமது ராணுவம் யாரை விடவும் குறைந்தது இல்லை பிரதமர் மோடி
-
இமாசலபிரதேசத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
தற்போது நாடு முழுவதும் உள்ள மக்கள் நமது ராணுவத்தின் வீரம் பற்றி பேசுகிறார்கள். நமது ராணுவம் யாரையும் விட குறைந்தது இல்லை. நான் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு வந்த போது ஒரு தரவரிசை ஒரு ஓய்வூதியம் பற்றி பேசினேன். 40 வருடங்களுக்கு பிறகு நமது அரசு அந்த வேலைகளை முடித்து உள்ளது.
இன்று இந்த வீரபூமியில் உங்களுக்கு சரியானது கொடுக்கபட்டு உள்ளது என சொல்கிறேன். இமாசல பிரதேச மக்களுக்கு இமயமலைபோல் பெரிய இதயம் உள்ளது. சுத்தமான இந்தியா திட்டத்தை வெற்றியடைய வைத்த மாண்டி மக்களுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்என கூறினார்.
முன்னதாக இமாச்சலப் பிரதேச மாநிலத் தில் 1,732 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 3 நீர்மின் நிலையங்களை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். கொல்தாம், பார்பதி, ராம்பூர் ஆகிய இடங்களில் மத்திய அரசின் பி.எச்.இ.எல். நிறுவனம் அமைத்துள்ளது.
இந்த விழாவில் மாநில கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத், முதல்-மந்திரி வீர பத்திர சிங் மற்றும் மத்திய மந்திரிகள் கலந்து கொண்டனர்.