வளர்ச்சியடைந்த இந்தியா... கனவை அடைய இந்த 11 விஷயங்களும் முக்கியம் - பிரதமர் மோடி போட்ட பட்டியல்!
PM Narendra Modi: வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவை அடைய குடிமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்குமான 11 தீர்மானங்களை பிரதமர் மோடி நேற்று மக்களவையில் பட்டியலிட்டார்.
PM Narendra Modi 11 Resolutions For Developed India Mission: அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்பட்டதன் 75ஆவது ஆண்டை முன்னிட்டு மக்களவையில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. இதன் இரண்டாம் நாளான நேற்று, பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். பிரதமர் மோடி சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக உரையாற்றினார்.
அந்த உரையின் போது 2047ஆம் ஆண்டு வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற கனவை நாடு அடைவதற்கு பிரதமர் மோடி 11 தீர்மானங்களை முன்வைத்தார். மேலும், அவரது தலைமையிலான அரசின் சாதனைகளையும் மக்களவையில் பிரதமர் பட்டியலிட்டார். அரசியலமைப்பு சட்டம் மீதும் மக்கள் வைத்துள்ள மதிப்பையும் அவர் போற்றினார். அதுமட்டுமின்றி, அரசியலமைப்பு சட்டத்தை தலைமுறை தலைமுறையாக சிதைத்து வந்ததாக நேரு - காந்தி குடும்பம் மீது கடுமையாக சாடினார்.
2047இல் வளர்ச்சியடைந்த இந்தியா
வளர்ச்சியடைந்த இந்தியா என்பது நாட்டில் உள்ள 140 கோடி குடிமக்களின் கனவு எனவும், ஒரு தேசமே மன உறுதியுடன் முன்னோக்கிச் செல்லும்போது, நமது எண்ணங்கள் நிறைவேறும் எனவும் அவர் கூறினார். மேலும் நாட்டின் குடிமக்கள் மீதும், அவர்களது திறன் மீதும், இளைஞர்கள் மற்றும் பெண் சக்தி மீதும் தனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருப்பதாக தெரிவித்த அவர் இந்தியா அதன் 100ஆவது சுதந்திர தினத்தை 2047ஆம் ஆண்டில் கொண்டாடும்போது, நிச்சயம் வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுத்திருக்கும் என்றார்
மேலும் படிக்க | UIDAI | ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி.. மோடி அரசு முக்கிய அறிவிப்பு
அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி எதையும் புரிந்து கொள்ளாதவர்கள் தம்மை விமர்சித்ததாக அவர் எதிர்க்கட்சிகளை சாடினார். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்வது, ஊழலுக்கு எதிரான மனநிலையை வலுப்படுத்துவது, அடிமைத்தனத்தின் மனநிலையில் இருந்து நாட்டை விடுவித்தல் மற்றும் நாட்டின் அரசியலை ஒற்றை குடும்பத்தில் இருந்து விடுவித்தல் ஆகியவற்றையும் அவரது 11 தீர்மானங்களில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
வளர்ச்சியடைந்த இந்தியாவை அடைய பிரதமர் மோடி முன்வைத்த 11 தீர்மானங்கள்
1. குடிமகன் என்றாலும் சரி, அரசாங்கம் என்றாலும் சரி, அனைவரும் தங்கள் கடமைகளை செய்ய தவறக்கூடாது.
2. ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு பிராந்தியமும், ஒவ்வொரு சமூகமும் வளர்ச்சியின் பலனை அனுபவிக்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும்.
3. ஊழலை சகித்துக்கொள்ளுதல் கூடாது. ஊழல் செய்பவர்களை சமூக ரீதியாக நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது.
4. நாட்டின் சட்டங்கள், விதிமுறைகள், மரபுகள் ஆகியவற்றை பின்பற்றுவதில் குடிமக்கள் பெருமைப்பட வேண்டும்.
5. அடிமை மனப்பான்மையில் இருந்து நாடு விடுபட வேண்டும். மேலும், நாட்டின் பாரம்பரியத்தின் மீது நாம் பெருமை கொள்ள வேண்டும்.
6. நாட்டு அரசியலில் குடும்ப அரசியல், வாரிசு அரசியல் இருக்கக் கூடாது.
7. அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்க வேண்டும். அரசியல் லாபத்திற்காக அதனை ஒரு ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது.
8. அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்க வேண்டும், இடஒதுக்கீட்டின் பயனாளிகளிடம் இருந்து அதனை பறிக்கக் கூடாது. மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை கொண்டுவரும் அனைத்து முயற்சிகளும் தடுக்கப்பட வேண்டும்.
9. பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் இந்தியா உலகிற்கே முன்னுதாரணமாக விளங்க வேண்டும்.
10. மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சியாகும். இதுவே நம் வளர்ச்சியின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.
11. ஒரே பாரதம், சிறப்பான பாரதம் என்ற நோக்கமே நமக்கு முதன்மையாக இருக்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ