ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ₹14,523 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புவனேஸ்வர் நகரில் ₹1260 கோடி ரூபாய் செலவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்திய தொழில்பயிற்சி மையத்தை பாரத பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.



இதைத்தொடர்ந்து லலித்கிரி புத்த மடாலயத்தில் அருங்காட்சியம், 100 படுக்கை வசதிகளுடன் தரம் உயர்த்தப்பட்ட ESI  மருத்துவமனை ஆகியவற்றையும் அவர் காணொலி மூலம் திறந்து வைத்தார்.


1817-ஆம் ஆண்டில் வெள்ளையர்கள் ஆட்சிக்கு எதிராக ஒடிசாவில் நடைப்பெற்ற ‘பைகா கலகம்’ சம்பவத்தின் 200-வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் சிறப்பு தபால் தலை மற்றும் நாணயத்தை பிரதமர் மோடி மற்றும் ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் ஆகியோர் இந்த விழா மேடையில் வெளியிட்டனர்.



இந்நிகழ்ச்சியின்போது, சுமார் ₹7200 கோடி ரூபாய் மதிப்பிலான ஐதராபாத்-பர்திப் பகுதிகள் இடையிலான இந்திய ஆயில் நிறுவனத்தின் குழாய் இணைப்பு திட்டம் மற்றும் பொக்காரா-அங்குல் இடையிலான ‘கெயில்’ நிறுவனத்தின் குழாய் இணைப்பு திட்டம் ஆகிய திட்டங்களுக்கும் மோடி அடிக்கல் நாட்டினார்


ஆக மொத்தம் ₹14,523 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு புதிய திட்டங்களை மோடி துவங்கிவைத்தார். இத்திட்டங்களால் ஒடிசாவின் மூலை முடுக்கில் இருக்கும் ஒரு தனி நபரும் பயனடைவர் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.