பாஜக-விற்கு எதிராக காங்கிரஸ் பொய்களையும், குழப்பத்தையும் பரப்பி வருவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று மத்தியப் பிரதேசத்தில் பல்வேற் திட்டங்களை துவங்கி வைப்பதற்காக சென்ற பிரதமர் மோடி ராஜ்கர் மாவட்டத்தில் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள மோகன்புரா பாசனத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.


அணைகள் மற்றும் பாசனக் கால்வாயை உள்ளடக்கிய இந்த திட்டத்தினால் மத்தியப் பிரதேசத்தில் 727 கிராமங்கள் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி தெரிவிக்கையில்...



"மத்தியப் பிரதேச மக்களுக்காக மோகன்புரா பாசனத் திட்டத்தை தொடங்கிவைப்பது தமது முதற்கடமை என தெரிவித்துள்ளார். மத்திய அரசையும், பாஜக-வையும் நம்பும் மக்களை குழப்புவதற்காக காங்கிரஸ் பொய்கள் கூறி வருகின்றது. 


அவநம்பிக்கையை பரப்புப்பும் நடைமுறையை எதார்த்தத்தோடு கொண்டிருப்பவர்கள் காங்கிரஸ் கட்சியினர் என மறைமுகமாக சாடினார். மேலும் ஒரே ஒரு குடும்பத்தை பெருமைப்படுத்துவதற்காக, ஜன சங்கத்தை நிறுவிய ஷியாமா பிரசாத் முகர்ஜி போன்ற நாட்டின் மிக உயர்ந்த ஆளுமைகளை சிறுமைப்படுத்த முயன்றதாகவும் காங்கிரஸ் மீது மோடி குற்றம்சாட்டியுள்ளார். 


நாட்டின் வலிமையில் நம்பிக்கை இல்லாமல் கடந்த 4 ஆண்டுகளாக விரக்தி, ஏமாற்றத்துடன் காங்கிரஸ் கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர், இதன் காரணமாகவே பாஜக-விற்கு எதிராக பொய்களையும், குழப்பத்தையும் பரப்பி வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.