COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுடெல்லி: இந்தியாவின் கோவிட் -19 தடுப்பூசி தொடர்பான நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய நடத்தப்பட்ட உயர்மட்டக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஜூன் 4, 2021) தலைமை தாங்கினார். அக்கூட்டத்தில் தடுப்பூசி வீணடிக்கப்படுவதை  குறைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


கொரோனா வைரஸ் தடுப்பூசிகள், வீணடிக்கப்படும் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும் அவற்றை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.


வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, வீணடிக்கப்பட்ட தடுப்பூசிகள் உட்பட, இந்தியாவில்  22.75 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.


பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், தற்போது தடுப்பூசிகள் இருப்பு குறித்தும், அதை அதிகரிப்பதற்கான செயல் திட்டம் குறித்தும் பிரதமர் மோடிக்கு அதிகாரிகள் விளக்கினர். தடுப்பூசிகளின் உற்பத்தியை அதிகரிக்க, பல்வேறு தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு உதவுதற்கான முயற்சிகள் குறித்தும் பிரதமருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.


தடுப்பூசி போடுவதற்கான செயல்முறையை மேலும் எளிதாக்கும் வகையில், தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அதிகாரிகள் பிரதமரிடம் தெரிவித்தனர்.


தடுப்பூசி கிடைப்பது குறித்து மாநிலங்களுக்கு முன்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது குறித்து அதிகாரிகள் பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தனர், மேலும் மக்களுக்கு எந்த வகையிலும் சிரமம் ஏற்படாத வகையில் இந்த தகவல்களை மாவட்ட மட்டங்களில் அனுப்புமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதற்கிடையில், இந்தியாவின் தற்போது, கொரோனா வைரஸ்  சிகிச்சையில் உள்ள கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 16,35,993 ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் 1.32 லட்சத்திற்கும் அதிகமான புதிய தொற்றுநோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.


இந்தியாவில் COVID-19 தொற்று பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 2,85,74,350 ஆக உள்ளது, இதில் 3,40,702 பேர் வைரஸ் தொற்று காரணமாக இறந்தனர். மறுபுறம், இந்தியாவில் குணம்டையும் விகிதம் இப்போது 93.08% ஆக உயர்ந்துள்ளது.


ALSO READ: இன்றைய கொரோனா நிலவரம்: தமிழகத்தில் 22,651 பேருக்கு தொற்று பாதிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR