கருப்பு பண ஒழிப்பு ஆதரவு அளிக்கும் மக்களுக்கு பாராட்டு- நரேந்திர மோடி
கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு மக்களுக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று கூறியுள்ளார்.
புதுடெல்லி: கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு மக்களுக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று கூறியுள்ளார்.
டிவிட்டரில் பிரதமர் கூறுகையில்:- கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிய மக்களுக்கு வீர வணக்கம் தெரிவித்துக்கொள்கிறேன். கருப்பு பணம், தீவிரவாதம் மற்றும் ஊழலுக்கு ஏதிராக இருக்கும் மக்கள் அனைவரையும் சல்யூட் செய்கிறேன்.
நான் உறுதி கொள்கிறேன் உங்களது கடின உழைப்பு, தியாகம், போராட்டம் வீணாய் போகவிடமாட்டேன். மேலும் அவர் கூறுகையில், நான் எப்போதும் கூறியுள்ளேன் அரசின் நடவடிக்கை சிரமத்தை ஏற்படுத்தால்ஆனால் இந்த குறுகிய கால வலி நீண்ட கால வெற்றிகள் வழி வகுக்கும் என்று கூறினார்.
ஊழலால் அரிக்கப்பட்டு இருந்த கிராமங்கள் தற்போது நல்ல பயன்களை பெற்றுள்ளன. அரசின் நடவடிக்கையால் இனி கிராமங்களில் கருப்பு பணம் ஊழல் குறையும். இது ஏழை மக்கள், நடுத்தர வர்க்கத்தினருக்கு பலனளிக்கும். எதிர்கால சந்ததியினருக்கு நலனை வழங்கும்.
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரொக்கமில்லா பரிமாற்றத்திற்கு மாற வேண்டிய ஒரு வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. கறுப்பு பணம் இல்லாத இந்தியா உருவாக்குவதை நாம் இணைந்து உறுதி செய்வோம் என தெரிவித்துள்ளார்.