ஜலந்தர்: ஜலந்தரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டிற்கே பஞ்சாப் உணவளிக்கிறது. நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் பஞ்சாப் எப்போதும் முன்னணியில் நிற்கும். துறவிகள், கதாநாயகர்கள், வீரர்கள் மற்றும் தியாகத்திற்கான தாய் மண்ணாக பஞ்சாப் திகழ்கிறது. 


பஞ்சாபின் பெருமை மற்றும் சுய மரியாதைக்கும் அந்த கட்சிகளை தோற்கடிக்கப்பட வேண்டும். சில கட்சிகள் பேராசைக்காகவும் போட்டியிட முடியாத காரணத்தினாலும், பஞ்சாப் பெருமையை அவமானப்படுத்துவது வருத்தத்திற்குரியது.


நாம் அரசியலையும், கட்சிகளையும் பார்த்துள்ளோம். ஆனால், காங்கிரஸ் எதிலும் பொருத்த முடியவில்லை. அக்கட்சி தேவைக்கேற்ப வளைந்து கொடுக்கிறது. தண்ணீருக்கு வெளியே துடிக்கும் மீன் போல் காங்கிரஸ் ஆட்சியமைக்க போராடுகிறது. 


காங்கிரஸ் கட்சிக்கு சட்டம் கிடையாது. ஆட்சிக்காக எதையும் செய்யும் காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் மூழ்கும் கப்பலாக உள்ளது. காங்கிரஸ் கட்சி செத்து கொண்டிருக்கிறது. 


இவ்வாறு அவர் பேசினார்.