வீடியோ! ``மாணவர்களின் மன அழுத்ததை குறைக்க`` டிப்ஸ் கூறிய மோடி!
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மன அழுத்ததை குறைத்து தேர்வுகளை எப்படி மேற்கொள்ள் வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மன அழுத்ததை குறைத்து தேர்வுகளை எப்படி மேற்கொள்ள் வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
நாடு முழுவதும் லட்சக் கணக்கான மாணவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பள்ளிகளில் இணைக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி டெல்லி ''டெக்கோட்டா ஸ்டேடியத்தில்'' என்ற இடத்தில் இன்று காலை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி:_ மன அழுத்ததை குறைத்து எப்படி தேர்வுகளை மேற்கொள்வது என்பது பற்றி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அவசியம். இதனை மாத்திரை போல் உட்கொள்ள முடியாது. தன்னம்பிக்கை என்பது நமக்கு நாமே சவால் நிர்ணயம் செய்யும் போதும், கடினமாக உழைக்கும் போது தான் வரும். தேர்விற்கு ஒருவர் நன்றாக தயார் செய்ய முடியும். ஆனால், தன்னம்பிக்கை இல்லாவிட்டால் தேர்வில் வெற்றி பெற முடியாது.
மதிப்பெண் நம்மை மேம்படுத்திக் கொள்ள சிந்திக்க வேண்டும். நீங்கள் பிரதமரோடு பேசவில்லை. உங்கள் நண்பருடன் பேசி கொண்டிருக்கிறீர்கள். நானும் இங்கு ஒரு மாணவனாக தான் வந்துள்ளேன்.இவ்வாறு அவர் பேசினார்.
அதை தொடர்ந்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அரங்கில் கூடி மாணவர்களுக்கு அறிவிரை வழங்கினர்.