புதுடெல்லி: ஜி 7 (G7) உச்சி மாநாட்டில் மூன்று அமர்வுகளில் பிரதமர் மோடி உரையாற்றுவார். இன்று ஜூன் 12 அன்று அதாவது சனிக்கிழமை மற்றும் நாளை அதாவது ஜூன் 13 ஞாயிற்றுக்கிழமை அன்றும், மொத்தம் 3 அமர்வுகளில் பிரதமர் உரையாற்றுகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமரின் உரையில், கொரோனா கால பிரச்சனை தீர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தப்படும் என கூறப்படுகிறது. இந்த முறை G7 உச்சிமாநாட்டிற்கு இங்கிலாந்து  தலைமை தாங்கும் நிலையில்,  மூன்று முக்கியமான அமர்வுகளில் பிரதமர் மோடியின் (PM Narendra Modi) உரை  உலக அளவில் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது என ஜீ நியூஸின்  சர்வதேச சேனலான வியானில்  (Wion)  வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


ஜி -7  (G7) உறுப்பு நாடுகளில், இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியமும் அடங்கும். உச்சிமாநாட்டை நடத்தும் இங்கிலாந்து, மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியாவுடன், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா  ஆகிய நாடுகளுக்கு  விருந்தினர்களாக கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளது.


ALSO READ | G7 உச்சிமாநாட்டிற்கு இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ள பிரிட்டன்..!!!


இந்த முறை ஜி 7 உச்சி மாநாட்டில், கொரோனா வைரஸ், தடையற்ற வர்த்தகம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. கொரோனா தொற்றுநோயிலிருந்து உலகை எவ்வாறு விடுவிப்பது என்பதில் அதிக கவனம் செலுத்தப்படும்.


பிரதமர் மோடி ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வது இது இரண்டாவது முறையாகும். ஒரு நல்லெண்ண கூட்டாளளியாக 2019 ஆம் ஆண்டில் ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இதற்குப் பிறகு, 2020 ஆம் ஆண்டிலும் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பின்னர் கொரோனா காரணமாக மாநாட்டை ரத்து செய்ய வேண்டியிருந்தது. 


பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson), ஜி -7 உச்சி மாநாட்டை கார்ன்வாலில் வெள்ளிக்கிழமை திறந்து வைத்து தொடக்க உரையாற்றினார். தொடக்க உரையில் ஜான்சன், 'தொற்றுநோயிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். கடந்த 18 மாதங்களில் நாம் செய்த தவறை  மீண்டும் செய்யாமல் கவனமாக இருந்து,  பொருளாதாரத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறினார்


பிரதமர் மோடிக்கு முன்பாக, மூன்று முக்கிய மத்திய அமைச்சர்களும் தங்கள் அமைச்சகங்களின் சார்பில் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.


ALSO READ | பிரதமர் மோடி இல்லத்தில் முக்கிய ஆலோசனை; மத்திய அமைச்சரவையில் மாற்றமா?


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR