G7 உச்சி மாநாட்டிற்கான பிரதமர் மோடியின் பிரிட்டன் பயணம் ரத்து: MEA

இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜான்சனின் (Boris Johnson) அழைப்பின் பேரில் கார்ன்வாலில் (Cornwall) நடைபெறவுள்ள G7 உச்சி மாநாட்டில் மோடி கலந்து கொள்ளவிருந்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 11, 2021, 10:16 PM IST
  • கோவிட் சூழ்நிலை காரணமாக G7 உச்சி மாநாட்டிற்கான பிரதமரின் பிரிட்டன் பயணம் ரத்து
  • இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரதமருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
  • முன்னதாக, COVID காரணமாக இங்கிலாந்து பிரதமரின் இந்தியா பயணமும் ரத்து செய்யப்பட்டது
G7 உச்சி மாநாட்டிற்கான பிரதமர் மோடியின் பிரிட்டன் பயணம் ரத்து: MEA title=

புதுடெல்லி: கொரோனா பரவல் நெருக்கடி நிலை காரணமாக இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ள ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் பிரிட்டன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக  வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை (மே 11) தெரிவித்தார்.

இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜான்சனின் அழைப்பின் பேரில் கார்ன்வாலில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவிருந்தார்.

"ஜி 7 உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் (Prime Minister Boris Johnson) பிரதமருக்கு அழைப்பு விடுத்ததை வரவேற்கும் அதே நேரத்தில், தற்போதுள்ள கோவிட் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பிரதமர் ஜி7 உச்சி மாநாட்டில் நேரில் கலந்து கொள்ள போவதில்லை  என்று முடிவு செய்யப்பட்டுள்ளது," என MEA செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த உச்சி மாநாடு ஜி 7 நாடுகள் பங்கேற்உம் 47வது உச்சி மாநாடாகும். ஜி7 உறுப்பு நாடுகளில் இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை அடங்கும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், COVID நிலைமை காரணமாக இங்கிலாந்து பிரதமரின் இந்தியா பயணமும் ரத்து செய்யப்பட்டது.

சில நாட்களுக்கு முன் இந்தியா பிரிட்டன் இடையே நடைபெற்ற மெய்நிகர் கூட்டத்தில், கொரோனா தடுப்பூசி உற்பத்தி உட்பட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

இரு தலைவர்களும் மேம்பட்ட வர்த்தக கூட்டாண்மைக்கான 'ரோட்மேப் 2030' ('Roadmap 2030' ) என்னும் திட்டதிற்கு இந்திஅயவும் பிரிட்டனும் ஒப்புக் கொண்டுள்ளது. 

அடுத்த பத்து ஆண்டுகளில் இரு நாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்புகள், வர்த்தகம் மற்றும் பொருளாதாரம், பாதுகாப்பு, காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கை மற்றும் சுகாதாரம் போன்ற முக்கிய துறைகளில் முக்கிய ஒப்பந்தங்களை ஏற்படுத்தி உறவை வலுப்படுத்துவதே, Roadmap 2030' என்னும் திட்டமாகும்.

ALSO READ | G7 உச்சிமாநாட்டிற்கு இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ள பிரிட்டன்..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News