ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது. வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30ம் தேதிவரை இந்தியா தலைமை பொறுப்பில் இருக்கும். இந்நிலையில், இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்திற்கான லோகோ, கருப்பொருள் மற்றும் இணையதளத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை பதவி ஏற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"'வசுதைவ குடும்பகம்' என்பது, உலகத்தின் மீதான இந்தியாவின் அன்பையும் கருணையையும் விளக்கும் வகையில் உள்ளது. உலகை ஒன்றிணைப்பதில் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தையும் நம்பிக்கையையும் தாமரை சித்தரிக்கிறது. லோகோவிற்கான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை நாட்டு மக்களிடம் கேட்டிருந்தோம். இன்று, அந்த பரிந்துரைகள் உருவம் பெற்று உலகளாவிய நிகழ்வின் முகமாக உருவெடுத்துள்ளது,” என்று பிரதமர் மோடி மேலும் கூறினார்.


மேலும், "காலனி ஆதிக்கத்தின் இருண்ட நாட்களை நாங்கள் கண்டிருக்கிறோம். பல சவால்கள் இருந்தபோதிலும், இந்தியா ஒவ்வொரு சாவாலான அனுபவம் அனைத்தையும் தனது பலமாக மாற்றியது," என்று பிரதமர் கூறினார். தற்போதைய தலைவர் பதவியில் இந்தோனேசியா உள்ள நிலையில், ஜி20 தலைவர் பதவியை இந்தியா ஏற்க உள்ளது. இந்தியாவுடன் இத்தாலி மற்றும் இந்தோனேசியா ஆகியவை G20 முக்கூட்டின் ஒரு பகுதியாகும். G20 தலைமை பொறுப்பு வகிக்கும் காலத்தில், ​​இந்தியா முழுவதும் பல இடங்களில் 32 வெவ்வேறு துறைகளில் சுமார் 200 கூட்டங்களை இந்தியா நடத்தும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாடு, இந்தியா நடத்தும் மிக உயர்ந்த சர்வதேச கூட்டங்களில் ஒன்றாக இருக்கும்.


மேலும் படிக்க | டிஜிட்டல் கரன்சி இந்திய பொருளாதாரத்தின் எதிர்காலமாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்!


G20 அமைப்பு, சர்வதேச பொருளாதார மற்றும் நிதி நிகழ்ச்சி நிரலின் மிக முக்கியமான அம்சங்களில் சர்வதேச ஒத்துழைப்புக்கான முதன்மை மன்றமாகும். இது உலகின் முக்கிய வளர்ந்த மற்றும் வளரும் பொருளாதாரங்களை ஒன்றிணைக்கிறது. G20 உச்சி மாநாடு 1999 ஆம் ஆண்டு நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் மட்டத்தில் தொடங்கப்பட்டது. 1990 களில் பல வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் நிலவும் நிதி நெருக்கடிகளுக்கு தீர்வுகளை காணும் வகையில் இது உருவாக்கப்பட்டது. டிசம்பர் 1999 இல், உலகப் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான முக்கியப் பிரச்சினைகளில் முறைசாரா பேச்சுவார்த்தை நடத்த, ஜெர்மனியின் பெர்லினில் முதன்முறையாக உறுப்பு நாடுகள் சந்தித்தன. அப்போதிருந்து, G20 உச்சிமாநாடு ஆண்டு விழாவாக இருந்து வருகிறது.


G20 உறுப்பு நாடுகள் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்கா அமெரிக்கா ஆகியவை ஆகும். சுழற்றி முறையில், கவுன்சில் பிரசிடென்சி மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவற்றால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்பினராக உள்ளது. G20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் ஆண்டுதோறும் சந்திக்கின்றனர். 1999 ஆம் ஆண்டு நிதியமைச்சர் மன்றமாக ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, இந்தியா G20 அமைப்பில் உறுப்பினராக இருந்து வருகிறது.


மேலும் படிக்க | உயர் சாதியினருக்கும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு சரியே! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ