தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்று  பிரதமர் மோடி கூறியுள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் பிரதமராக மோடி 2 வது முறையாக பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவிற்கு சென்றார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இந்தியாவும், மாலத்தீவும் ஒரே கலாச்சார பின்னணியை கொண்டது என்றும், இரு நாடுகளுக்கும்  இடையேயான உறவு தனித்துவமானது எனவும் கூறினார்.  தீவிரவாதம் அனைத்து நாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது என்றும், தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


இதைத்தொடர்ந்து, மாலத்தீவில் இருந்து பிரதமர் மோடி இன்று இலங்கை இலங்கை சென்றார். அங்கு இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவுடன், பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, ஈஸ்டர் குண்டுவெடிப்பு நிகழ்ந்த தேவாலயத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார் மோடி. இது குறித்து அவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், "கொடூரமான ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல், செயின்ட் அந்தோனி தேவாலயம், கோச்சிக்கேடி ஆகிய இடங்களில் என் மரியாதையை செலுத்தியதன் மூலம் ஸ்ரீலங்கா விஜயம் ஆரம்பிக்கப்பட்டது. என் இதயம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு வெளியே செல்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.



மேலும், இலங்கை மீண்டும் உறுதியான நாடாக எழுந்து நிற்கும். இது போன்ற கோழைத்தனமான தாக்குதல்களில் இலங்கையை அச்சுறுத்தி விட முடியாது. இந்தியா எப்போதும் இலங்கைக்கு உறுதுணையாக இருக்கும்" எனவும் அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 



பிரதமர் மோடியின் இலங்கை வருகை குறித்து இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா பதிவிட்ட ட்விட்டர் பதிவில்; நரேந்திரமோடி அவர்களுக்கு நன்றி, உங்களின் வருகை நம் நாட்டிற்கு மிகவும் உச்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக்கு நீட்டிக்கப்பட்ட உங்கள் ஆதரவு சைகை, ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை நான் மிகவும் மதித்து மதிப்பிட்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார். 



இதையடுத்து, இலங்கையில் இருந்து புறப்பட்டு, மாலை 6 மணி அளவில் ஆந்திராவில் உள்ள திருப்பதி கோயிலில் மோடி சாமி தரிசனம் செய்ய உள்ளார்.