17வது அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்களின் முழு பட்டியல்!!
மோடி அமைச்சரவையில் பதவியேற்க உள்ள அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
புதுடில்லி: இன்று (வியாழக்கிழமை) மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க்க உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) தலைவர் அமித் ஷா மோடியை சந்தித்து புதிய அமைச்சரவையில் இடம் பெரும் அமைச்சர்களின் பட்டியலை குறித்தும், பதவியேற்ப்பு விழா குறித்தும் தீவிரமாக ஆலோசனை செய்தார்.
இந்த ஆலோசனைக்கு பிறகு தனது புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக குடியரசுத் தலைவருக்கு மத்திய அமைச்சர்களின் பட்டியல் அனுப்பப்பட உள்ளது.
17 வது அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சிவசேனா கட்சிகளுக்கு 2 இடமும், லோக் ஜன் சக்தி கட்சி மற்றும் அகாலித் தல் கட்சிக்கு தலா ஒரு இடமும், தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் கூட்டாளியான அதிமுகவுக்கும் ஒரு இடம் கிடைக்கலாம் எனவும் தெரிகிறது.
இன்று பிரதமராக பதவியேற்ப்பதற்கு முன்பாக மாலை 4:30 மணி அளவில் மத்திய அமைச்சரவை பட்டியலில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களை பிரதமர் சந்திக்க உள்ளனர். டெல்லி 7வது லோக் கல்யாண் சாலையில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.
புதிய அமைச்சரவை பட்டியல்:-
1. அர்ஜுன்ரம் மெக்வால்
2. ஜிதேந்திர சிங்
3. ராம்தாஸ் அதாவலே
4. ஜீ கிஷன் ரெட்டி
5. ராம் விலாஸ் பாஸ்வான்
6. சுரேஷ் அங்கடி
7. பியுஷ் கோயல்
8. பிரஹலால் ஜோஷி
9. முக்தார் அப்பாஸ் நக்வி
10. தர்மமேந்திர பிரதான்
11. ஹர்சிம்ரத் கவுர்
12. பாபிலோன் சப்ரியோ
13. சுஷ்மா ஸ்வராஜ்
14. ஸ்மிருதி இரானி
15. நிர்மலா சீதாராமன்
16. பிரகாஷ் ஜவேத்கர்
17. ரவி ஷங்கர் பிரசாத்
18. ரமேஷ் போக்ரியால் நிஷாங்க்
19. பிரஹலாத் படேல்
20. கைலாஷ் சவுத்ரி
21. தவேர்சந்த் கெலாட்
22. கிஷான் பால் குர்ஜார்
23. சாத்வி நிரஞ்சன் ஜோதி
24. கிரான் ரிஜிஜு
25. நரேந்திர தோமர்
26. சதானந்த் கவுடா
27. ஆர்.சி.பி. சிங் (ஜனதா தள ஐக்கிய)
28. புருசோத்தம் ரூபலா
29. கஜேந்திர ஷெகாவத்
30. அனுப் பட்டேல்
31. ராவ் இட்ராஜிட்
32. சஞ்சீவ் பியாலன்
33. சஞ்சய் தோட்ரே
34. நித்யானந்த் ராய்
35. ராஜ்நாத் சிங்
36. சந்தோஷ் கங்கர்
37. கிரிராஜ் சிங்
38. சோம் பிரகாஷ்
39. வி.கே. சிங்