கொரோனா காலத்தில் நலிவுற்ற சாலையோர வியாபாரிகள் தங்கள் வணிகங்களை மீண்டும் தொடங்குவதற்காக, பிணையில்லாத பணி மூலதனக் கடனை எளிதாக்குவதற்காக, கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பிரதமரின் சாலையோர வியாபாரிகளின் தற்சார்பு நிதியை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் கீழ் மார்ச் 15, 2022 நிலவரப்படி மூவாயிரத்து119 கோடி ரூபாய் மதிப்புள்ள கடன்கள் பயனாளிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் 28.8 கோடி சாலையோர வியாபாரிகள் பயனடைந்துள்ளதாகவும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இணை அமைச்சர் கௌஷல் கிஷோர் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இதுதொடர்பாக மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர், தமிழகத்தில் இருந்து இத்திட்டத்தின் முதல் கட்டத்தில் 3லட்சத்து 41ஆயிரத்து 298 விண்ணப்பங்களும், இரண்டாம் கட்டத்தில் 3ஆயிரத்து636 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் பல்வேறு வங்கிகள் மூலம் 16ஆயிரத்து105.74 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | குட் நியூஸ்: பெட்ரோல் வாகனங்களுக்கு இணையாக குறையும் மின்சார வாகனங்களின் விலை



இந்நிலையில், முதல் கட்டத்தில் 1லட்சத்து 92ஆயிரத்து 433 விண்ணப்பங்களுக்கும், இரண்டாம் கட்டத்தில் 2ஆயிரத்து300 விண்ணப்பங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு, முதல் கட்டத்தில் 1லட்சத்து 59ஆயிரத்து65 கடன்களும், இரண்டாம் கட்டத்தில் ஆயிரத்து 895 கடன்களும் வழங்கப்பட்டுள்ளதாக விவரமாக கௌஷல் கிஷோர் விளக்கமளித்துள்ளார்.


மேலும் படிக்க | ஹரியானா சட்டப் பேரவையில் மதமாற்றத்துக்கு எதிரான மசோதா நிறைவேறியது


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR