பிரதமர் நரேந்திர மோடி சீனாவில் இருந்து மூன்று நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் மியான்மர் நாட்டுக்கு சென்றார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தலைநகர் நய் பியி டாவில் பிரதமர் மோடிக்கு மியான்மர் அதிபர் ஹிடின் கியாவ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


இதற்கிடையே, பிரதமர் மோடி, மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகி-யை நேற்று சந்தித்தார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்தும் வகையில் 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 


இந்நிலையில், மியான்மரில் உள்ள யாங்கூன் பகுதியில் ஷ்வேடகான் பகோடாவிற்கு இன்று பிரதமர் மோடி சென்றார். மோடிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


அங்குள்ள புத்தர் பெருமானை வணங்கி பிரார்த்தனையில் ஈடுபட்டார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தன.