மும்பையில் தனது வங்கிக்கணக்கில் 80 லட்சம் ரூபாய் பணம் இருந்தும் இதய அறுவை சிகிச்சைக்கு கட்டணம் கட்ட முடியாமல் முதியவர் பரிதாப பலி..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மோசடி பாதிப்புக்குள்ளான பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கி தொடர்பான மற்றொரு சோகமான சம்பவத்தில், 80 வயதான வைப்புத்தொகை சிகிச்சைக்காக பணத்தை எடுக்க முடியாமல் மாரடைப்பால் இறந்தார். பாதிக்கப்பட்டவர் முர்லிதர் தாரா என அடையாளம் காணப்பட்டவர், வடகிழக்கு மும்பையில் முலுண்ட் காலனியில் வசிப்பவர்.


மும்பை புறநகரான முலுண்டைச் சேர்ந்த 83 வயதான முர்லிதர் தர்ரா, பஞ்சாப் மகராஷ்டிரா வங்கியில் 80 லட்சம் ரூபாய் பணம் டெபாசிட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தர்ராவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அறுவை சிகிச்சைக்கு அதிகளவில் பணம் தேவைப்பட்டுள்ளது. ஆனால் பஞ்சாப் மகராஷ்டிரா வங்கியில் நடைபெற்ற கடன் முறைகேட்டை தொடர்ந்து அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு 40 ஆயிரம் ரூபாய்தான் எடுக்கமுடியும் என்று ரிசர்வ் வங்கி வரம்பு நிர்ணயித்துள்ளதால் அறுவை சிகிச்சைக்கு தேவையாக பணத்தை முர்லிதர் தர்ரா வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கமுடியவில்லை.


இதனால் உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் அவர் பரிதாமாக உயிரிழந்தார். இந்த நிலையில் தங்கள் பணத்தை திரும்ப தர வலியுறுத்தி பஞ்சாப் மகராஷ்டிரா வங்கி வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


"எனது தந்தை நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். டாக்டர்கள் அவரை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்திருந்தனர். வங்கியில் உள்ள எங்கள் கணக்குகளில் இருந்து பணம் எடுக்க முடியாததால் அவருக்கு முறையான சிகிச்சையை ஏற்பாடு செய்ய முடியவில்லை" என்று தாராவின் மகன் பிரேம் செய்தி நிறுவனமான ANI இடம் கூறினார். PMC வங்கியின் வைப்புத்தொகையாளர்கள் இறந்த மூன்றாவது நிகழ்வு இதுவாகும்.