மத்திய நிதித்துறை அமைச்சகத்துக்கு மூடுவிழா நடத்தப்பட்டு விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறுநீரக கோளாறு காரணமாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த ஒருமாத காலமாக அலுவலகத்துக்கு வராமல் சிகிச்சைக்காக தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். 


இதனால் அவரது பொறுப்புகளை கவனிக்க வேண்டிய மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் செயலாளர் ஹஸ்முக் ஆதியா மைசூருவில் உள்ள தனது ஆன்மிக குரு சுவாமி விஷ்ரானந்த சரஸ்வதியுடன் யோகாசனம் மற்றும் மனவளக்கலை பயிற்சி செய்வதற்காக 20 நாள் விடுமுறையில் சென்றுள்ளார்.



இதனால், நிதித்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகள் முழுவதுமாக முடங்கிவிட்டது என சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.


இந்த செய்திகளை மேற்கோள் காட்டி, கங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் "மத்திய நிதித்துறை அமைச்சகத்துக்கு மூடுவிழா நடத்தப்பட்டு விட்டது"  என கிண்டலடித்துள்ளார்.


இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.. "அன்புக்குரிய நிதி அமைச்சருக்கு, உங்களுக்கு உடல்நலம் சரியில்லை. நிதித்துறை செயலாளரும் தனது ஆன்ம அமைதிக்காக குருவுடன் விடுமுறையில் உள்ளார்.


எனவே, மறு அறிவிப்பு வரும்வரை நிதித்துறை அமைச்சகத்துக்கு விடுமுறை அளிக்க நான் தீர்மானித்துள்ளேன். முன்பிருந்ததைப்போல் நிதித்துறை தொடர்பான அனைத்து முடிவுகளையும் பிரதமர் அலுவலகமே இனி கவனித்துக் கொள்ளும் இப்படிக்கு, பிரதமர்" என குறிப்பிட்டுள்ளார்