நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.1217.20 கோடி மதிப்பிலான 41 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை ஒன்றில் ரூ.11,400 கோடி மதிப்பிலான பண மோசடி நடந்து உள்ளது. இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சி.பி.ஐ.யிடம் அளித்த அந்த புகாரில் மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரியும், கோடீஸ்வரர் நிரவ் மோடி நிறுவனம் இந்த மோசடியில் ஈடுபட்டு இருப்பதாக சமீபத்தில் தெரிய வந்தது. 


வங்கி அளித்த புகாரின்படி, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையினர் நிரவ் மோடிக்கு சொந்தமான நிறுவனங்கள், இடங்கள், கடைகள், அலுவலகங்களிலில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில், கடந்த பிப்ரவரி 24ம் தேதி நடந்த சோதனையில் நிரவ் மோடிக்கு சொந்தமான 523.72 கோடி ரூபாய் மதிப்பிலான 21 அசையா சொத்துகள் முடக்கப்பட்டன. 



அதை தொடர்ந்து, வைர வியாபாரி நீரவ் மோடிக்கு சொந்தமான 41 சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. நீரவ் மோடியின் பங்குதாரர் மெகுல் ஜோக்ஷியின் ரூ.1217.20 கோடி மதிப்பிலான சொத்துகளும், 15 வீடுகள், 17 அலுவலகங்கள்,1 வணிக வளாகம், 1 பண்ணை வீடு உள்ளிட்டவை முடக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் உள்ள நீரவ் மோடிக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் இடங்களும் முடக்கப்பட்டுள்ளது.