PNB Fraud Case: நிரவ்மோடி-யின் 21 சொத்துக்கள் முடக்கம்!
நிரவ் மோடிக்கு சொந்தமான 524 கோடி ரூபாய் மதிப்பிலான 21 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.
நிரவ் மோடிக்கு சொந்தமான 524 கோடி ரூபாய் மதிப்பிலான 21 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை ஒன்றில் ரூ.11,400 கோடி மதிப்பிலான பண மோசடி நடந்து உள்ளது. இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சி.பி.ஐ.யிடம் அளித்த அந்த புகாரில் மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரியும், கோடீஸ்வரர் நிரவ் மோடி நிறுவனம் இந்த மோசடியில் ஈடுபட்டு இருப்பதாக சமீபத்தில் தெரிய வந்தது.
வங்கி அளித்த புகாரின்படி, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையினர் நிரவ் மோடிக்கு சொந்தமான நிறுவனங்கள், இடங்கள், கடைகள், அலுவலகங்களிலில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று நடந்த சோதனையில் நிரவ் மோடிக்கு சொந்தமான 523.72 கோடி ரூபாய் மதிப்பிலான 21 அசையா சொத்துகள் முடக்கப்பட்டன. இவை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டன.
முடக்கப்பட்ட சொத்துகளில் 6 குடியிருப்பு மற்றும் அலுவலக கட்டடங்கள் மும்பையிலும், 2 பிளாட்கள் புனே நகரிலும், பண்ணை வீடு ஒன்று அலிபாவுக் பகுதியிலும், ஒரு சோலார் சக்தி நிலையம் மற்றும் 135 ஏக்கர் நிலமும் அஹமத் நகரிலும் உள்ளன என்பது குறிபிடத்தக்கது.