பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபல நகை வியாபாரி, நிரவ் மோடியும், அவரது மாமாவும், கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவன அதிபருமான, மெஹுல் சோக்சியும், பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில், வங்கி அதிகாரிகள் துணையுடன், 12,600 கோடி ரூபாய் மோசடி செய்தனர். இந்த மோசடி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையினை ஏற்படுத்தியது.


இந்த ஊழல் தொடர்பாக பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது மாமா மேஹுல் சோக்ஸி ஆகியோருக்குச் சொந்தமான 5,100 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. 


இதையடுத்து, பணமோசடி செய்துவிட்டு பிரிட்டனில் பதுங்கியுள்ள நிரவ் மோடி, அந்நாட்டிடம் அடைக்கலம் கோரியுள்ளதாக கடந்த திங்கள்கிழமை தகவல்கள் வெளியான நிலையில் தற்போது, நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.  


வங்கி கடன் மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நிரவ் மோடியின் பாஸ்போர்ட் பிப் 24 ஆம் தேதியே முடக்கப்பட்ட நிலையில் மார்ச் 15 முதல் மார்ச் 31 வரை அமெரிக்கா, லண்டன், ஹாங்காங்கிற்கு பயணம் செய்துள்ளதாக இன்டர்போல் தற்போது தகவல் தெரிவித்துள்ளது. மேலும், நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.