PNB Fraud Case: வங்கி அதிகாரி ராஜேஷ் ஜிண்டால் கைது!
ரூ.11,400 கோடி மோசடி வழக்கு தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரி ராஜேஷ் ஜிண்டாவை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை ஒன்றில் ரூ.11,400 கோடி மதிப்பிலான பண மோசடி நடந்து உள்ளது. இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சி.பி.ஐ.யிடம் அளித்த அந்த புகாரில் மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரியும், கோடீஸ்வரர் நிரவ் மோடி நிறுவனம் இந்த மோசடியில் ஈடுபட்டு இருப்பதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், ரூ.11,400 கோடி மோசடி தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரி ராஜேஷ் ஜிண்டால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுமேலாளர் பதவிக்கு இணையான தகுதியுடைய அதிகாரி ராஜேஷை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். முறைகேடு நடந்த மும்பை பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2009 - 2011 வரை மேலாளராக பணியாற்றியவர் ராஜேஷ் என்பது குறிபிடத்தக்கது.
SOURCE: With PTI Inputs