லண்டன்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து லண்டன் தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடிக்கு (Nirav Modi) ஜாமீன் வழங்க இங்கிலாந்து உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பஞ்சாப் நேஷனல் வங்கியில் இந்திய வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் உட்பட ரூ.13,000 கோடி கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. ஆனால் மோசடி வெளியில் தெரியும் முன்னே நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர்கள் லண்டனுக்கு தப்பிச் சென்றனர். இந்த விவகாரம் தொடர்பாக இவர்களின் மேல் வழக்கு பதிவு செய்து சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள அவர்களது பல்வேறு சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.


இந்தியாவில் மோசடி செய்துவிட்டு லண்டனில் சுற்றி வந்த நீரவ் மோடியை கைது செய்ய வேண்டும் என்று இந்தியா கோரிக்கை வைத்தது. இதனையடுத்து இங்கிலாந்து, அவரை கைது செய்து லண்டன் சிறையில் அடைத்தது. அவர் விரைவில் இந்தியா கொண்டுவரப்பட உள்ளார். 


இதனிடையே, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக்கோரி நீரவ் மோடி தாக்கல் செய்த 3 மனுக்களை லண்டன் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. மீண்டும் நான்காவது ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று லண்டன் நீதிமன்றத்தில் வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.