இந்தியாவின் ஒரு பகுதியான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்கள் செயல்படுவதாக கூறப்படுகிறது. இந்த பகுதியில் பாகிஸ்தான் ஆதரவுடன் பயங்கரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித்திட்டங்கள் தீட்டி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வாழும் மக்கள் தாங்கள் அன்றாட வாழ்வில் சிரமமம் ஏற்படிகிறது. எங்களுக்கு நரகத்தில் வாழ்வது போன்று இருக்கிறது. இதற்க்கு காரணம் ஆக்கிரமிப்பு காஷ்மிரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் தான் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் முசாபராபாத், கோட்லி, சினாரி, மிர்பூர், கில்ஜித், டைமர் மற்றும் நீலம் பள்ளத்தாக்கு பகுதிகளில் வசிப்பவர்கல் ஆவார்கள். இவர்கள் போராட்டத்தில் தரப்[தற்போது ஈடுபட்டுள்ளனர். 


போராட்டத்தின் போது அவர்கள் கூறியதாவது:- ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதால் எதுவும் நடைபெற போவது இல்லை என்றும் போராட்டக்காரகள் தெரிவித்தனர். டைமர் கில்ஜித் படுகைகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நாங்களே இந்த விவகாரத்தை கையில் எடுப்போம் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.