காரை தனியாக ஓட்டிச் செல்கையில் மாஸ்க் அணியததற்காக அபராதம் விதிக்க இயலாது..!!!
முகமூடி இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக சராசரியாக டெல்லி காவல்துறை தினமும் 1,200 முதல் 1,500 பேருக்கு அபராதம் விதித்து வருகிறது.
உங்கள் காரில் நீங்கள் தனியாக பயணம் செய்யும் போது முகமூடி அணியவில்லை என்றால், இனி போலீசார் உங்களுக்கு அபராதம் விதிக்க முடியாது
ஒரு காரை தனியாக ஓட்டிச் செல்லும் ஒரு நபர் அல்லது தனியாக உடற்பயிற்சி செய்பவர் அல்லது சைக்கிள் ஓட்டிக் கொண்டு தனியாக செய்யும் நபர் ஆகியோர் முகமூடி அணிய வேண்டியதில்லை. தனியாக கார் ஓட்டினால் அல்லது சைக்கிள் ஓட்டினால் முகமூடி அணிய சொல்லி பரிந்துரைக்கும் எந்த வழிகாட்டுதல்களையும் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிடவில்லை.
ஒரு காரில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இருந்தால், மக்கள் குழு உடற்பயிற்சி செய்கிறார்களானால், முகமூடி அணிந்து, ஒருவருக்கொருவர் தொற்று ஏற்படாத வகையில் சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும் என்று மத்திய சுகாதார செயலாளர் செயலாளர் ராஜேஷ் பூஷண் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
COVID-19 தொற்று பாதிப்புகள் நாட்டில் அதிகரித்து வருவதால், ஏராளமான மக்கள் தங்கள் கார்களில் உள்ளே இருக்கும்போது முகமூடி அணியாமல் இருப்பதற்காக அபராதம் விதிக்கப்படுவதாக புகார் கூறியுள்ளனர்.
தனியாக கார் ஓட்டும் போது அல்லது சைக்கிள் ஓட்டும்போது முகமூடி அணிய வேண்டியது அவசியமா என்ற கேள்விக்கு பதிலளித்த பூஷண், "ஒரு நபர் காரை தனியாக ஓட்டும் போது அல்லது தனியாக சைக்கிள் ஓட்டிச்செல்லும் போது முகமூடி அணிவது குறித்து சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை" என்று தெளிவுபடுத்தினார்.
முகமூடி இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக சராசரியாக டெல்லி காவல்துறை தினமும் 1,200 முதல் 1,500 பேருக்கு அபராதம் விதித்து வருகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த தில்லி காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர், ஜூன் 13 தேதியிட்ட டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (டி.டி.எம்.ஏ) வழங்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வருவதாகக் கூறினார், அந்த வழிகாட்டுதலில், பொது இடத்தில் முகமூடி அணியாத எந்தவொரு நபருக்கும் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது என்றார்.
”சாலையில் ஒடும் கார் பொது இடமாகக் கருதப்படுவதால், நாங்கள் அபராதம் விதிக்கிறோம். சப்-இன்ஸ்பெக்டர் அல்லது அதற்கு மேல் உள்ள எந்தவொரு அதிகாரியும் அபராதம் விதிக்கலாம். அபராதம் விதிக்கக் கூடாது என எந்தவொரு எழுத்துப்பூர்வ உத்தரவும் எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. புதிய உத்தரவுகளைப் பெற்றவுடன், அவற்றைப் பின்பற்றத் தொடங்குவோம், ”என்று காவல்துறை அதிகாரி கூறினார்.
மேலும் படிக்க | "அமைதி ஏற்பட நம்பிக்கை தேவை": சீன பாதுகாப்பு அமைச்சர் முன்னிலையில் ராஜ்நாத் சிங்