CAA-க்கு எதிர்த்து நாடகம் நடத்திய பள்ளி மீது தேசத் துரோக வழக்கு!!
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடகம் போட்டதற்காக பள்ளி மீது தேசத் துரோக வழக்கு!!
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடகம் போட்டதற்காக பள்ளி மீது தேசத் துரோக வழக்கு!!
கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற பள்ளி ஆண்டுவிழாவின் போது குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 4 ஆம் வகுப்பு மாணவர்கள் நகைச்சுவை நாடகம் ஒன்றை அரங்கேற்றினர். அந்த நாடகத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக தவறான வார்த்தையைப் பயன்படுத்தி மாணவர்கள் நடித்துள்ளதாகவும், அரசின் சட்டத்தை அவமதிக்கும் விதமாக இருப்பதாகவும் கூறி இந்துத்வா அமைப்பை சேர்ந்த ஒருவர் பிதார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த நாடகத்தின் வீடியோவை முகமது யூசுப் ரஹீம் எனும் பிதாரைச் சேர்ந்த பத்திரிகையாளர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இதையடுத்து, லோக்கல் சங்கியான நீலஷ் ரக்ஷயால் உடனே உள்ளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். தனையடுத்து வீடியோ ஆதாரங்களை வைத்து, புகார் மீது நடவடிக்கை எடுக்கும் பேரில், கடந்த 26 ஆம் தேதி சம்பந்தப்பட்ட ஷாஹீன் பள்ளியின் மீது இந்திய தண்டனைச் சட்டம் 504, 5050(2), 124(ஏ), 153(ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் போலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், இதுதொடர்பாக பள்ளியில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது கர்நாடக போலிஸார் பள்ளி மாணவர்களிடம் விசாரணை செய்யும் புகைப்படம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.