பெங்களூரு: கர்நாடகாவில் பாலிவுட் நடிகர் கங்கனா ரனாவத்  ட்வீட் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அண்மையில் உள்ளூர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்கை துமகுரு மாவட்டத்தில் போலீசார் பதிவு செய்துள்ளனர்.


கங்கனா ரனாவத்திற்கு எதிராக பெங்களூரு உள்ளூர் நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவின் அடிப்படையில் துமகுரு மாவட்டத்தில் திங்கள்கிழமை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்


இது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 108 (தூண்டுதல்), ஒரு சமூகத்தின் மீது விரும்பத்தகாத அவதூறு (153 ஏ) மற்றும் அமைதி குலைக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பது (504)  ஆகிய பிரிவுகள் அடங்கும் என போலீஸார் தெரிவித்தனர்


பெங்களூருவில் உள்ள துமகுரு  குற்றவியல் நீதிமன்றம், அக்டோபர் 9 ம் தேதி, வழக்கறிஞர் எல் ரமேஷ் நாயக்கின் புகாரின் பேரில், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது.


CAA பற்றி தவறான தகவல்களையும் வதந்திகளையும் பரப்பி, கலவரத்தை ஏற்படுத்திய மக்கள் தான் இப்போது விவசாயிகள் மசோதா குறித்து தவறான தகவல்களை பரப்பி, தேசத்தில் வன்முறையை தூண்டி வருகிறார்கள், அவர்கள் பயங்கரவாதிகள்” என கங்கனா ரனாவத் ட்வீட் செய்திருந்தார்.



ALSO READ | Kerala Gold Smuggling: 8 மாதத்தில் 19 முறை தங்கக் கடத்தலில் ஈடுபட்டார் Swapna Suresh


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe