காணாமல் போன பச்சைக் கிளி... கண்டு பிடித்து கொடுத்தால் ₹5,000 வெகுமதி அறிவித்த பெண் இஸ்பெக்டர்!
மீரட்டில் உள்ள பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனது கிளி காணாமல் போனதால் மிகவும் வருத்தமடைந்தார். கிளியை கண்டுபிடித்து அழைத்து வருபவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் பரிசு அறிவித்தார்.
விஷால் பட்நாகர் / மீரட்: வாய் பேச இயலாத விலங்குகள் மற்றும் பறவைகள் மீது மனிதனின் அபரிமிதமான அன்பைப் பற்றி பல சம்பவங்களை கேள்விப் பட்டிருப்போம். அதில் ஒன்று தான் இது. இதில் தனது செல்ல பறவை தொலைந்தால் மிகவும் மனது பாதிக்கப்பட்டுள்ளார் ஒரு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர். அது காணாமல் போனது குறித்து பல்வேறு விளம்பரங்களை அச்சிட்டு வெளியிட்டுள்ளார். அது கிடைத்தால் வெகுமதிஎன அறிவிக்கப்பட்டதன் காரணமாக, இன்ஸ்பெக்டர் தான் இழந்த செல்லப்பிராணி அல்லது பறவை மீண்டும் கிடைத்து விடும் என நம்பிக்கையுடன் இருக்கிறார். மீரட்டின் மோகன்புரியில் இருக்கும் இவர், உத்தரபிரதேச காவல்துறை LIUவில் பணிபுரியும் சிறப்பு ஆய்வாளர் ஸ்வேதா யாதவின் செல்ல கிளி வீட்டில் இருந்து பறந்து சென்றுள்ளது. அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 5000 ரூபாய் பரிசு தொகையாக வைத்துள்ளார்.
இன்ஸ்பெக்டர் ஸ்வேதா யாதவ், தனது கிளி வீட்டின் உறுப்பினரைப் போலவே இருப்பதாக கூறினார். அவர் வீட்டிற்கு வந்த போது கிளியின் காலில் காயம் ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பறவை மிகவும் பயந்த சுபாவமாக இருப்பதாக கூறிய இன்ஸ்பெக்சர், அதனால் தான் கிளியை நினைத்து கவலைப்படுவதாக குறிப்பிட்டார். யாரேனும் தன் கிளியை கண்டுபிடித்து கொடுத்தால் 5000 ரூபாய் பரிசாக தருவதாக கூறினார்.
செய்திக்குப் பிறகு கிளியுடன் வரும் மக்கள்
இந்த செய்தி அதிகளவில் வைரலாகி வருகிறது. இதனை படித்த பலர் பல வகையான கிளிகளுடன் பலர் அவரது வீட்டை அடைகின்றனர். இது அவரது கவலையை மேலும் அதிகரித்துள்ளது. ஏனென்றால் அவள் விரும்புவது அ தான் வளர்த்த அந்த கிளி தான். கிளி சந்தோசமாக இருக்க வேண்டும், எந்த வித பிரச்சனையும் சந்திக்காமல் இருக்க வேண்டும், உண்மையில் யாரிடமாவது சென்று அடைந்துவிட்டால், அதை அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஆனால் வேறு எந்த கிளியையும் தொந்தரவு செய்யாதீர்கள் என மக்கலை அவர் கேட்டுக் கொள்கிறார்.
6 மாதங்களாக ஒரு வித்தியாசமான காட்சி
விலங்குகள் மற்றும் பறவைகள் மீதான இந்த வகையான அன்பு மீரட்டில் பல முறை காணப்பட்டது என்று சொல்லலாம். மீரட் கங்காநகரில் வசிக்கும் ஒரு பெண், பாதுகாப்புப் படையில் பணியமர்த்தப்பட்டு, தனது சம்பளம் முழுவதையும் தெரு நாய்களை கவனிப்பதற்காகச் செலவிடுகிறார். மறுபுறம், ஒரு பெண் தனது இரண்டு நாய்களின் பிறந்தநாளில் ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்தார். இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதுமட்டுமின்றி கடந்த 6 மாதங்களாக ஒரு தனிக் காட்சி காணப்பட்டது. வீட்டில் ஒரு வளர்ப்பு நாய் காணாமல் போனது. அவரைத் தேட, மீரட்டில் வசிக்கும் ஒருவரின் மகள் வெளிநாட்டிலிருந்து மீரட் வந்திருந்தார். இதற்காக ரூ.15,000 வெகுமதியும் வைத்திருந்தார்.
மேலும் படிக்க | பிரதமர் மோடி 100 முறை பிரதமரானாலும் ஆட்சேபனை இல்லை! ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ரியாக்ஷன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ