காஷ்மீரில் உள்ளூர் பயங்கரவாதிகளை, மண்ணின் மைந்தர்கள் என முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கருத்து தெரிவித்தமைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனந்த்நாக் பகுதி கட்சி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மெகபூபா, காஷ்மீர் பயங்கரவாதிகள் இந்த மண்ணின் மைந்தர்கள். அவர்களை காக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்தார். மேலும், அவர்களின் துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர அவர்களுடனும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.


பாக்கிஸ்தான் உடன் தற்போது எப்படி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதோ, அதே போன்று அவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.


1996-ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வந்தது முதல் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி எடுக்க வேண்டும் என்று. அவர்கள் நமது சொத்து. அவர்களை பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருவதாக குறிப்பிட்ட அவர், என்கவுன்டரை நிறுத்தப்பட்டால், பயங்கரவாதிகளும், பாதுகாப்பு படையினரும் நேருக்கு நேர் சந்தித்தாலும் ஒன்றும் நடக்காது எனவும் தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர் பாராளுமன்ற தேர்தலுக்காக காஷ்மீர் மாணவர்களை அரசியல் ரீதியாக பயன்படுத்துவதற்காக அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது அப்சல் குருவை அனுப்ப முடிவு செய்தது. அதற்கான விலையை காஷ்மீர் இன்று கொடுத்துக் கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.


இந்நிலையில்., காஷ்மீர் பயங்கரவாதிகளை மண்ணின் மைந்தர்கள் என  மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி கூறி புகழ்ந்தது கண்டிக்கத்தக்கது என அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.