புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டார் அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவ்வாய்க்கிழமை (2022, ஏப்ரல் 26) அன்று காங்கிரசுடன் இணைவதற்கான வாய்ப்பை நிராகரித்த பிரசாந்த் கிஷோர், பழம்பெருமை வாய்ந்த பாரம்பரிய கட்சிக்கு ஒரு ஆலோசனையைக் கூறிவிட்டு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.


 'தாழ்மையான கருத்து' என்று தனது அறிவுறுத்தலை கூறும் அரசியல் வியூக நிபுணர், கட்சியில் ஆழமாக வேரூன்றியிருக்கும் கட்டமைப்பு பிரச்சனைகளை காங்கிரஸ் கட்சி சரிசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  


"EAG (Empowered Action Group-2024) இன் ஒரு பகுதியாக கட்சியில் சேரவும், தேர்தல்களுக்கு பொறுப்பேற்கவும் காங்கிரஸின் தாராளமான வாய்ப்பை நான் நிராகரித்தேன்," என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.  



"எனது தாழ்மையான கருத்துப்படி, என்னை விட, கட்சிக்கு தலைமை மற்றும் கூட்டு விருப்பமும், ஆழமான வேரூன்றிய கட்டமைப்பு பிரச்சனைகளை சீர்திருத்தங்கள் மூலம் சரி செய்ய வேண்டும்" என்று அவர் காங்கிரஸிற்கு ஆலோசனை தெரிவித்தார்.  


2024ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் காங்கிரஸின் கையை உயர்த்தும் முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு இதனால் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸில் மூத்த பதவியை ஏற்று கட்சிக்கு புத்துயிரூட்ட கட்சி மேலிடம் பிரசாந்த் கிஷோருக்கு உரிய சுதந்திரத்தைக் கொடுக்க தயங்கியதால் பிரசாந்த் கிஷோர் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.


மேலும் படிக்க | காங்கிரஸ்-க்கு பிரசாந்த் கிஷோரின் ‘மான்ஸ்டர்’ பிளான்! 2024-ம் ஆண்டு பிரதமர் வேட்பாளர் இவரா?


இது தொடர்பாக டிவிட்டரில் செய்தி வெளியிட்ட காங்கிரஸின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, பிரசாந்த் கிஷோரின் முயற்சிகளையும் ஆலோசனைகளையும் கட்சி பாராட்டுகிறது என்று கூறினார்.


”பிரசாந்த் கிஷோருடனான விளக்கக்காட்சி மற்றும் கலந்துரையாடலை மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கான அதிகாரமளிக்கப்பட்ட செயல் குழுவை உருவாக்கி, வரையறுக்கப்பட்ட பொறுப்புடன் குழுவின் ஒரு பகுதியாக கட்சியில் சேர அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டார். அவரது முயற்சிகள் மற்றும் கட்சிக்கு வழங்கிய ஆலோசனைக்க் நன்றி, அவரை  நாங்கள் பாராட்டுகிறோம்” என்று காங்கிரஸ் கட்சியின் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.



 


2014 ஆம் ஆண்டில், நரேந்திர மோடியின் பிரதமர் நாற்காலி கனவுக்கு முக்கியப் பங்காற்றிய கிஷோர், அண்மைக் காலமாக, பல்வேறு பிராந்திய கட்சிகள் மாநிலங்களில் வெற்றி பெறுவதற்கு அவற்றுடன் இணைந்து பணியாற்றினார்.


அவரது சமீபத்திய வாடிக்கையாளர்களின் பட்டியல் நீளமானது. அதில் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி (ஆந்திரா), அரவிந்த் கெஜ்ரிவால் (டெல்லி), மம்தா பானர்ஜி (மேற்கு வங்கம்) எம்.கே.ஸ்டாலின் (தமிழ்நாடு) ஆகியோர் அடங்குவர்.


ஆளும் பாரதிய ஜனதா கட்சியுடன் (BJP) ஒப்பிடும்போது, பழமையான பாரம்பரிய காங்கிரஸ் கட்சி, தற்போது சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருக்கிறது. மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், காங்கிரஸ் கட்சியின் தோழமைக் கட்சிகள் ஆட்சியில் உள்ளன. 


மேலும் படிக்க | இளையராஜா சர்ச்சைப் பேச்சுகளும், சில ரிப்ளைகளும்.!


பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் சேர ஆர்வமாக இருந்தார், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பணிபுரிய விரும்பினார். கடந்த வாரத்தில் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது, காங்கிரஸ் மீளும் என்ற எண்ணம் ஏற்பட்டது.  


அவர் காங்கிரஸில் சேராததற்குக் காரணம் தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலுக்காக டிஆர்எஸ் உடன் அவரது நிறுவனமான ஐ-பிஏசி கையெழுத்திட்டது என்றும், இது காங்கிரஸ் தலைமைக்கு அவ்வளவு பிடிக்கவில்லை என்றும் தகவறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


பிரசாந்த் கிஷோருடன் இணைந்து வேலை பார்ப்பதில் காங்கிரஸுக்கு என்ன பிரச்சனை. உண்மையில், பிரசாந்த் கிஷோருடன் இணைவதற்கு அந்த கட்சியின் சில தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


சித்தாந்த அடிப்படை என்பதுடன்,  காங்கிரஸின் போட்டியாளர்களுடன் (உதாரணமாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி) பிரசாந்த் கிஷோருக்கும் உள்ள தொடர்பு காங்கிரஸ் கட்சியின் சில உயர்மட்ட தலைவர்களுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.


மேலும் படிக்க | நாட்டுக்கு அவர் நிச்சயம் தேவை..ராகுல்காந்திக்கு சொத்துகளை எழுதி வைத்த மூதாட்டி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR