பஞ்சாப் முதல்வரின் பிரதான ஆலோசகர் பதவியிலிருந்து விலகினார் பிரஷாந்த் கிஷோர்
தேர்தல் செயலுத்தி ஆலோசகர் பிரஷாந்த கிஷோர், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தேர்தல் செயலுத்தி ஆலோசகர் பிரஷாந்த கிஷோர், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பொதுவாழ்விலிருந்து சில காலம் ஓய்வெடுப்பதற்காக இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
2022 ஆம் ஆண்டில் பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தற்போது பிரஷாந்த் கிஷோர் (Prashant Kishor) ராஜினாமா செய்துள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
"பொது வாழ்க்கையில் தீவிரமாக ஈடுபடுவதிலிருந்து தற்போது தற்காலிகமாக ஓய்வு எடுப்பதற்கான எனது முடிவை கருத்தில் கொண்டு, உங்கள் முதன்மை ஆலோசகராக என்னால் பொறுப்புகளை ஏற்க முடியவில்லை. இந்த பொறுப்பிலிருந்து என்னை தயவுசெய்து விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பிரசாந்த் கிஷோர் அமரிந்தர் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.
முன்னதாக, ஏப்ரல் மாதம் தமிழகம் (Tamil Nadu), மேற்கு வங்கம் உட்பட சில மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பிரஷாந்த் கிஷோரின் நிறுவனம் வியூகம் வகுத்து தேர்தல் செயலுத்திகளை அமைத்துக் கொடுத்த கட்சிகள் வெற்றி பெற்றன. எனினும், மே மாதம் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்த நிலையிலேயே தான் அரசியல் வியூகம் அமைக்கும் பணியிலிருந்து விலகுவதாக அறிவித்த பிரஷாந்த் கிஷோர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
ALSO READ: பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் சேருவாரா? பிஜேபி-க்கு எதிராக மாஸ்டர் பிளான்?
அதைத் தொடர்ந்து ஜூலை மாதம், அவர் காங்கிரஸ் (Congress) கட்சித் தலைவர்களை சந்தித்தார். அதன் பின்னர், அவர் காங்கிரஸ் கட்சியில் சேரக்கூடும் என்ற வலுவான ஊகங்களும் கிளம்பின.
பிரசாந்த் கிஷோர் மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் சந்திப்பு வெறும் பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் பற்றியது மட்டும் அல்ல என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த சந்திப்பு மிகப் பெரிய திட்டத்துக்கான ஆரம்பம் என்றும், 2024 மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் திட்டமிடலில் பிரசாந்த் கிஷோர் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன என்றும் அப்போது கூறப்பட்டது.
இதற்கிடிடையில் தற்போது தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், பஞ்சாபில் தேர்தல் வியூகம் வகிக்கும் தனது பொறுப்பை பிரஷாந்த் கிஷோர் ராஜினாமா செய்துள்ளார். இதன் பின்னணி என்ன, இதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என அனைத்து விவரங்களும் வரும் நாட்களில் தெரிய வரும்.
ALSO READ: Prashant Kishor: அரசியலை தலைமுழுகிவிட்டேன், குடும்பத்துடன் நிம்மதியாக இருப்பேன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR