Prashant Kishor: அரசியலை தலைமுழுகிவிட்டேன், குடும்பத்துடன் நிம்மதியாக இருப்பேன்

அண்மையில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு, நிலவரம் பெரும்பாலும் உறுதியாகிவிட்டது. பல எதிர்பார்ப்புகள் உண்மையாக, பல பொய்த்துப் போக என தேர்தல் களம், கலவரமாகிக் கொண்டிருக்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 2, 2021, 05:01 PM IST
  • அரசியலுக்கு தலைமுழுக்கு
  • குடும்பத்துடன் நிம்மதியாக இருக்க விருப்பம்
  • திமுக, TMCக்கு வெற்றி பாதை வகுத்த அரசியல் உத்தி வகுப்பாளரின் அதிரடி
Prashant Kishor: அரசியலை தலைமுழுகிவிட்டேன், குடும்பத்துடன் நிம்மதியாக இருப்பேன் title=

புதுடெல்லி: அண்மையில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு, நிலவரம் பெரும்பாலும் உறுதியாகிவிட்டது. பல எதிர்பார்ப்புகள் உண்மையாக, பல பொய்த்துப் போக என தேர்தல் களம், கலவரமாகிக் கொண்டிருக்கிறது.

தேர்தல்கள் பல ஆச்சரியங்களை கொடுக்கும், சில திகைப்பூட்டல்களையும், அதிர்ச்சியையும் தன்னுள்ளே வைத்திருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால், எல்லா வியூகங்களையும் உடைத்தெறிந்து அரசியலின் பின்புலத்தில் இருந்து செயல்படும், சாணக்கிய வியூகம் அமைப்பவர் என்று அறியப்படும் ஒருவரின் பதவி விலகும் அறிவிப்பு கலவையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read | Election Result 2021: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பின்னடைவு

இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில், பிரசாந்த் கிஷோர் என்ற அரசியல் மதியூகியின் நிறுவனம் பணியாற்றிய இரு கட்சிகள் வெற்றிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. பலரின் பார்வையும் அவரை நோக்கி குவியும் நிலையில், இனிமேல் தான் அரசியல் வியூகம் அமைக்கும் பணியில் இருந்து விலகுவதாக  அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் திமுகவிற்கும், மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸிற்கும் தேர்தல் உத்தி வகுப்பாளராக பணியாற்றினார். 

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ், தமிழகத்தில் திமுக வெற்றி பெறும் நிலைமை வந்துவிட்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருப்தியுடன் எனது பணியில் இருந்து விலகுகிறேன் என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

Also Read | அண்ணா அறிவாலயத்திற்கு வெளியே திமுக தொண்டர்கள் கொண்டாட்டம்!

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் உத்திகளை அமைத்துக் கொடுக்கும் பணியில் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான நிறுவனம் ஈடுபட்டிருந்தது.

மேற்கு வங்கத்தில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறவே தடுமாறும்,   ஒருவேளை 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சிறப்பான வெற்றியைப் பெற்றுவிட்டால், நான் ட்விட்டரிலிருந்து விலகிவிடுகிறேன்” என அவர் சூளுரைத்திருந்ததும் நினைவிருக்கலாம்.   தமிழகத்தில் திமுகவுக்காக பிரசாந்த் கிஷோரின் நிறுவனம் தேர்தல் பணியாற்றிவந்தது. தமிழகத்திலும் திமுகவே வெற்றி பெறும் நிலை உள்ளது.

சற்று நேரத்திற்கு முன்னதாக பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பிரசாந்த் கிஷோர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:  

''மேற்கு வங்கத் தேர்தலில் பாஜகவே வெற்றி பெறும் என்ற மாயதோற்றம் கட்டமைக்கப்பட்டது. ஆனால், எல்லாத் தேர்தல்களிலும் பாஜக வெற்றிபெற்று விடாது என்று தொடர்ந்து கூறியதே இன்று உண்மையாகி இருக்கிறது”.

Also Read | அசாமில் ஆளும் கட்சியே சிம்மாசனத்தை கைப்பற்றுகிறது

பிரதமர் மோடியின் பிரபலம் ஒன்றின் அடிப்படையிலேயே பாரதிய ஜனதா கட்சி எல்லாத தேர்தல்களிலும் வெற்றி பெற முடியாது. இதனை உணர்ந்துகொள்ள வேண்டும். தமிழகத்திலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றுள்ளது. எனது கணிப்புப்படியே, பாஜக இரட்டை இலக்கத்தைத் தாண்டவில்லை”.

9 ஆண்டுகள் அரசியல் உத்தி ரீதியிலான பணியை திருப்தியுடன் செய்துவிட்டேன். இனிமேல் குடும்பத்தினருடன் காலத்தைச் செலவிட விரும்புகிறேன். எனது ஐபேக் நிறுவனத்தில் உள்ள பிற நண்பர்கள் இனி பணிகளை முன்நின்று நடத்துவார்கள்''.

பிரசாந்த் கிஷோரின் இந்த முடிவு பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், இதன் பின்னணியில் என்ன இருக்கிறது என்ற பலத்த கேள்விகளும், சந்தேகங்களும் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

Also Read | TMC முன்னிலை வகிப்பது மாயத்தோற்றமே: கைலாஷ் விஜய்வர்க்கியா

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News