தற்போது 17வது மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி முதற்க்கட்ட தேர்தல் முடிந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தை பொருத்த வரை ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

80 நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தில் மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான கூட்டணி கட்சியும், பாஜக மற்றும் காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது. நாட்டின் அதிக மக்களவை தொகுதிகளை கொண்டது உத்தர பிரதேச மாநிலம் ஆகும். அதனால் தான் தேசிய கட்சிகளின் உ.பி-யில் அரசியலில் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றனர். 


 



இந்தநிலையில், நடிகரும், முன்னால் பாஜக அமைச்சருமான சத்ருகன் சின்ஹாவின் மனைவி பூனம் சின்ஹா சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவின் முன்னிலையில் இணைந்தார். இவர் SP சார்பில் பாஜக வேட்பாளர் ராஜ்நாத் சிங்கிற்கு எதிராக லக்னோ தொகுதியில் களம் இறக்கப்படுவார் எனத் தெரிகிறது. 


அதேபோல சத்ருகன் சின்ஹாவும் பாஜகவில் இருந்து விலகி ராகுல் காந்தி முன்னிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.