Pune Car Accident News: போர்ஷே விபத்தில் குற்றம் சாட்டப்பட்ட 17 வயது இளைஞர் சட்டவிரோதமாக மது அருந்திய கோசி மற்றும் பிளாக் ஆகிய இரண்டு மதுபானக்கூடத்திற்கு புனே கலால் துறை இன்று (மே 21, செவ்வாய்கிழமை) சீல் வைத்தது. மேலும் மதுபானக்கடையின் உரிமையாளரை புனே போலீசார் கைது செய்ததை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை மொத்தம் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சிறுவனுக்கு மது வழங்கிய பார் மேலாளரும் போலீஸ் காவலில் உள்ளார். முன்னதாக, புனேவில் இருந்து 230 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அவுரங்காபாத்தில் வசித்து வந்த இளைஞரின் தந்தை விஷால் அகர்வால் கைது செய்யப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறுவனுக்கு 14 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் இந்த விவகாரம் நாடு முழுவதும் புயலை கிளப்பிய நிலையில் சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டார். 17 வயது இளைஞன் 18 வயதை அடைய இன்னும் நான்கு மாதங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


சிறுவனின் தந்தை கைது


ஒரு பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபரான சிறுவனின் தந்தை விஷால் அகர்வால் மீது சிறார் நீதிச் சட்டத்தின் பிரிவு 75 கீழ் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரில், 'தனது மகனுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என்று தெரிந்தும், காரை ஓட்ட அவருக்கு அனுமதி தந்துள்ளார். இதனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. தனது மகன் மது அருந்துவதை அறிந்திருந்தும் அந்த நபர் அவரை விருந்துக்கு அனுமதித்ததாகவும் போலீசார் குறிப்பிட்டு உள்ளனர்.


பார் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது வழக்குபதிவு


18 வயதுக்குட்பட்ட ஒருவருக்கு மது வழங்கியதற்காக கோழி பார் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. தனது 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அடுத்து, நண்பர்களுடன் கொண்டாடுவதற்காக அந்த சிறுவன் மதுக்கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது. மதுபான பாட்டில்கள் நிறைந்த மேஜையில் அவர் அமர்ந்திருப்பது பாரில் இருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.


மேலும் படிக்க - பெரிய சர்ச்சை! பாஜகவுக்கு ஒரே நேரத்தில் 8 முறை வாக்களித்த இளைஞர்... ஷாக் வீடியோ


குடிபோதையில் 200 கிமீ வேகத்தில் காரை ஓட்டிய சிறுவன்


குடிபோதையில் போர்ஷே காரை தாறுமாறாக ஓட்டிய சிறுவன், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கல்யாணி நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் மீது 200 கிமீ வேகத்தில் சென்ற சொகுசு கார் மோதியதாக போலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


சிறுவனின் குடிபோதையால் இருவர் உயிரிழப்பு


சொகுசு கார் மோதி தூக்கி வீசப்பட்ட அனிஸ் அவதியா மற்றும் அஷ்வினி கோஷ்தா தம்பதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த இருவரும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.


சில மணி நேரத்தில் சிறுவனுக்கு ஜாமீன்


இந்த சம்பவத்தை அடுத்து அந்த சிறுவனை அப்பகுதி மக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர. பின்னர் அவரை சிறார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். சில மணி நேரம் கழித்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. 


அதில், 15 நாட்கள் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது முதல் நிபந்தனை. மேலும், மனநல மதிப்பீடு மற்றும் சிகிச்சைக்குச் செல்ல வேண்டும் என்றும் சாலை விபத்துகள் மற்றும் தீர்வு என்ற தலைப்பில் 300 வார்த்தைகள் கொண்ட கட்டுரை எழுத வேண்டும். போதை ஒழிப்பு மையத்தில் சேர வேண்டும் மற்றும் போக்குவரத்து விதிகளைப் படித்து இது தொடர்பாகச் சிறார் வாரியத்திடம் விளக்க வேண்டும். மேலும் வரும் காலத்தில் விபத்து ஏற்படுவதைப் பார்த்தால் அதில் சிக்கியவர்களுக்கு உதவ வேண்டும் போன்ற நிபந்தனை விதிக்கப்பட்டு ஜாமீன் வழங்கப்பட்டது. 


உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளோம் -புனே காவல்துறை


இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 304 கீழ் அந்த இளைஞர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. விபத்தை ஏற்படுத்திய சிறுவனை வயது முதிர்ந்தவராக கருதி விசாரணை நடத்த உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க - புனே சொகுசு கார் விபத்து: பறிபோன 2 உயிர்கள், திக் திக் வீடியோக்கள், சிறுவனுன் தந்தை கைது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ