குஜராத் மாநிலத்தில் நடந்த மதக் கலவரத்திற்கு பிறகு அப்போதைய முதல்வர் நரேந்திர மோடியை பதவியில் இருந்து விலக்க நினைத்தவர் வாஜ்பாய் என பாஜக முன்னாள் தலைவர் யஷ்வ்த் சின்ஹா தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவைத் தேர்தலுக்கான 5 கட்ட வாக்குப்பதிவுகள் இதவரை நடந்து முடிந்துள்ளது, நாளை 6-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.


இதற்கிடையில் மத்திய பிரதேச மாநில போபாலில் செய்தியாளர்களை சந்தித்தார் பாஜகவின் முன்னாள் தலைவர் யஷ்வந்த் சின்ஹா தெரிவிக்கையில்., "2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த மதக் கலவரத்திற்கு பின்னர் அப்போதைய முதல்வராக இருந்த நரேந்திர மோடியை பதிவியில் இருந்து நீக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் எண்ணினார் எனவும், ஒருவேளை ராஜினாமா செய்ய மறுப்பு தெரிவித்தால் குஜராத் அரசை கலைக்கவும் திட்டமிட்டிருந்தார்" எனவும் தெரிவித்தார்.


மேலும் அதே ஆண்டு கோவா-வில் நடைப்பெற்ற பாஜக-வின் செயற்குழு கூட்டத்தின் போது, மோடியை நீக்குவதற்கான வாஜ்பாயின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார் முன்னாள் உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


நரேந்திர மோடியை முதல்வர் பதவியில் இருந்து நீக்கினால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என வாஜ்பாயிடம் தெரிவித்தவர் அத்வானி. ஆகையால் தனது முடிவையே வாஜ்பாய் கைவிட்டார். ஆனால் தற்போது தனது அரசையும், பதவியையும் காப்பாற்ற அத்வானியையே எட்டி உதைத்து பிரதமராக மோடி பதவி வகித்து வருகிறார் எனவும் வேதனை தெரிவித்தார்.