இனி இரவு நேரத்திலும் பிரேதப் பரிசோதனை செய்யலாம்: மத்திய அரசு
மத்திய சுகாதார அமைச்சகம் திங்களன்று பிரேத பரிசோதனைக்கான நெறிமுறைகளை மாற்றியமைத்தது. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகும் பிரேத பரிசோதனை நடத்தலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது
மத்திய சுகாதார அமைச்சகம் திங்களன்று பிரேத பரிசோதனைக்கான நெறிமுறைகளை மாற்றியமைத்தது. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகும் பிரேத பரிசோதனை நடத்தலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது
இறந்தவரின் குடும்பத்திற்கு உதவும் நோக்கிலும், உறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சையை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் இறந்த உடன் பிரேத பரிசோதனை செய்தால், உறுப்பு தானம் செய்ய நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.
மேம்பட்ட தொழில்நுட்பம் உள்ள இந்த கால கட்டத்தில், போதிய உள்கட்டமைப்புகள் கிடைப்பதால், மருத்துவமனைகளில் இரவு நேர பிரேத பரிசோதனை செய்வது இப்போது சாத்தியமாகும் என்று மத்திய அரசு (Central Government) கூறியுள்ளது
உடல் உறுப்பு தானத்திற்கான பிரேதப் பரிசோதனை முன்னுரிமையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகும், பிரேத பரிசோதனையை வழக்கம் போல் நடத்தும் வகையிலான உள்கட்டமைப்பைக் கொண்ட மருத்துவமனைகளில் 24 மணிநேரமும் பிரேத பரிசோதனை நடத்தலாம் என்றும் நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ALSO READ | திணறும் டெல்லி: அதிகரிக்கும் மாசை கட்டுப்படுத்த தீவிர முயற்சியில் அரசு
ஆதாரங்கள் எதுவும் நீர்த்துப் போகாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து, மருத்துவமனை பொறுப்பாளரால் மதிப்பீடு செய்யப்படும். மேலும், இரவில் மேற்கொள்ளப்படும் அனைத்து பிரேதப் பரிசோதனைகளுக்கும் வீடியோ பதிவு செய்யப்படுவதையும், சட்ட நோக்கங்களுக்காகவும் எதிர்காலக் குறிப்புக்காகவும், அதனை பாதுகாத்து வைக்கும் வசதி மூலம் இதனை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், கொலை, தற்கொலை, கற்பழிப்பு, சிதைந்த உடல்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான வகையில் ஏற்பட்ட மரணம் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையிலும், சட்டம் ஒழுங்கு நிலைமை பாதிக்கப்படும் வகையிலான வழக்குகளில் இரவில் பிரேத பரிசோதனைக்கு அனுமதி இல்லை. சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சகங்கள்/துறைகள் மற்றும் அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நெறிமுறை மாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ:தில்லியில் காற்று மாசு: லாக்டவுன் அறிவிக்கப்படுமா; உச்ச நீதிமன்றம் கூறியது என்ன..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR