அனைவரது ஆதரவுடன் வரும் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக நடிகர் பிரகாஷ்ராஜ் அறிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஆண்டில் பிரதமர் மோடிக்கு எதிராக, பகிரங்கமாக எழுப்பப்பட்ட குரல்களில் ஒன்று நடிகர் பிரகாஷ் ராஜ்-ன் குரல், மத்தியில் ஆளும் பாரதீய ஜனதாவை எதிர்த்து அடிக்கடி அவர் கருத்து வெளியிட்டு வந்த அவர், தனது நெருங்கிய தோழியான கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் பா.ஜக அரசை மிக கடுமையாக விமர்சித்தார்.


இதைத்தொடர்ந்து பிரகாஷ்ராஜை தங்களது கட்சியில் சேர்த்துக்கொள்ள காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளும் முயற்சிகள் செய்தன. எனினும் எந்த கட்சியாலும் பிரகாஷ்ராஜை தங்கள் பக்கம் ஈர்க்க முடியவில்லை.


இதற்கிடையில் தமிழகத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் தங்களுது கட்சி, மன்றங்களுடன் அரசியல் களத்தில் குதித்து விட்டனர். இந்நிலையில் நடிகர் நடிகர் பிரகாஷ்ராஜ் திடீரென வரும் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்து உள்ளார். 


இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...



“அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். புதிய தொடக்கம் துவங்கிவிட்டது. அதிக பொறுப்புகள் வந்துள்ளன. உங்கள் அனைவரது ஆதரவுடன் வருகிற பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவேன். தொகுதி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடுவேன். இதற்கு பின் மக்களாட்சி உருவாகும்” என குறிப்பிட்டுள்ளார்.


கர்நாடகாவில் உள்ள முக்கிய தொகுதி ஒன்றில் அவர் களம் இறங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக-வை எதிர்த்து குரல் கொடுக்கும் இவருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கலாம் என கூறப்படுகிறது.


முன்னதாக கடந்த 2017-ஆம் ஆண்டு நடைப்பெற்ற குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு சுயோட்டை வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானி, தனித்து வெற்றிப்பெற்றார். இவர் தொடர்ந்து பாஜக-விற்கு எதிரான முழக்கங்களை பகிரங்கமாக வைத்து வருபவர். இவருக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியினரில் ஆதரவு இத்தொகியில் உள்ளது. இந்நிலையில் தற்போது பிரகாஷ் ராஜும் இதே பாதையை தேர்ந்தெடுத்துள்ளார்.