புதுடெல்லி: இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று பிரதமர் மோடி அவருக்கு டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்கள் 1935-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி பிறந்தார். இவர் இன்று தனது 81-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 


டிவிட்டரில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஜனாதிபதிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்து. அவரது அனுபவம் மற்றும் ஞானத்தால் நமது நாடு மிகச் சிறந்த பயனை அடைந்துள்ளது. அவர் நீண்ட காலம், நலமுடன் வாழ பிரார்த்திக்கிறேன். பிரணாப் எப்போதும் மற்றவைகளை விட நாட்டு நலனையே பெரிதாக கருதுபவர். இது போன்றதொரு நன்கு படித்த, அறிவான ஜனாதிபதியை நாம் பெற்றிருப்பதில் பெருமை கொள்வோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.




குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஜூலை 25, 2012 அன்று இந்திய 13-வது ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.