25-ம் தேதி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ராம்நாத் கோவிந்த் பதவியேற்கவுள்ள நிலையில், தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாளை ஓய்வு பெறுகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி நம் நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அவர்களது ஆயுள்காலம் வரை அவர்கள் விரும்பும் பகுதிகளில் வாடகை, மின்சாரம் மற்றும் குடீநீர் கட்டணம் இல்லாமல் வீடு வழங்கப்பட வேண்டும். இதற்காக, டெல்லி ராஜாஜி மார்க் பகுதியில் உள்ள பங்களாவில் பிரணாப் முகர்ஜி நாளை குடியேறுகிறார். 


முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தனது இறுதிக்காலம் வரை இந்த வீட்டில்தான் வசித்தார். அவரது மறைவிக்கு பின்னர் இந்த வீடு மத்திய கலாச்சாரத்துறை மந்திரி மகேஷ் ஷர்மாவுக்கு ஒதுக்கப்பட்டது.


ஓய்வு பெற்ற பின்னர் இந்த வீட்டில் குடியேற ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருப்பம் தெரிவித்திருந்தார். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இரண்டு மாடிகளை கொண்ட இந்த வீட்டுக்கு வர்ணம் பூசும் பணிகள் மற்றும் தோட்டத்தை சீரமைக்கும் பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகின்றன.