விசாகப்பட்டினத்தில், கர்ப்பிணி பெண்னுக்கு நடந்த அவலம்!
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரை 6km தூரம் போர்வையால் தூக்கிச் சென்று பிரசவம் பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரை 6km தூரம் போர்வையால் தூக்கிச் சென்று பிரசவம் பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த அனுக் எனும் கிராமத்தில் பழங்குடிய இன மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இருந்து நகரத்திற்கு சரியான சாலை அமைக்கபடாமல் இருப்பதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அப்பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவரை கொண்டுச் செல்ல 108 ஆம்புலன்ஸ்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டும் வராத காரணத்தால் போர்வையை கொண்டு மூங்கில் பல்லாக்கு அமைத்து அவரது உறவினர்கள் சுமார் 6 கிமி தூரம் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
முன்னதாக கடந்த ஜூன் 7 அன்று இதேப்போல் கேரளா மாநிம் அட்டப்பாடி கிராமத்தில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் பிரசவத்திற்காக அவரை அவரது உறவினர்கள் போர்வையினை கொண்டு தூக்கிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இதேப்போன்ற சம்பவங்கள் நடைப்பெற்று வரும் நிலையில் அரசு அதிகாரிகள் தொடர்ந்து இந்த விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது வேதனை அளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்!