கேரளாவில் 3 வாரங்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு கேரளா பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு உள்ளது. எனவே, கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்.... இதுவரை கேரளா வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 164-ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.


கேரளாவில் காஸர்காட் மாவட்டத்தை தவிர 13 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். இப்பணியில் இந்திய ராணுவ அதிகாரிகளுடன் இணைந்து பேரிடர் மீட்புகுழுவினரும் செயல்பட்டு வருகின்றனர்.



இந்நிலையில் கேரள வெள்ளத்தில் இருந்து நிரைமாத கர்ப்பிணியாக மீட்கப்பட்ட சஜிதா ஜாபீல்(25) அழகிய ஆண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். கேரளாவின் ஆலப்புழா பகுதியை சேர்ந்த இவரை நிரைமாத கர்ப்பிணியாக இந்திய ராணுவத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த இவருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் மக்கள் துயரப்பட்டு வரும் நிலையில், தான் தாய்மை நிலையினை அடைந்திருப்பது மறக்கமுடியாத நிகழ்வாக கருதுவதாக சஜிதா தெரிவித்துள்ளார்!